
இளைஞர்களே! இது உங்கள் நேரம்! உங்கள் குரலை உயர்த்தவும் இந்த இந்திய தேசத்தின் கோணல்களை நிமிர்த்தவும் களம் உங்கள் முன்னே காத்துக் கிடக்கிறது. நீங்கள் நினைத்தால் உண்மையான, ஊழலற்ற, அனைவருக்கும் நல்ல உணவு, உடை, வீடு, அனைவருக்கும் வேலை, சரிசமமான உரிமை, மக்களுக்கான அரசாங்கம் என நிஜத்தில் நடத்திக் காட்ட முடியும்! எங்களின் போராட்டம் தமிழனின் தலை நிமிர்த்தும் போராட்டம் மட்டுமல்ல இந்தியாவின் தலை விதியையே மாற்றும் புரட்ச்சி என்று உலகிட்கு உணர்த்த முடியும். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறார் பாரதி. இந்தியாவில் எத்தனை கோடி ஜனங்களுக்கு உணவில்லை எத்தனை விவசாயிகள் தற்கொலை வீதியிலிறங்கி போராடியும் விளையாட்டு உரிமையை கூட கொடுக்க மறுக்கிறார்களே! யாரிடம் கேட்க வேண்டும் உன் உரிமையை? எவன் கொடுக்க வேண்டும் உனக்குச் சலுகையை? கடற்கரை வாசம் பூண்ட காளைகளே மீட்டு வாருங்கள் உங்கள் வாழ்வாதாரத்தை... உறக்கச் சொல்லுங்கள் உங்களை உரிமையை ... உடைத்தெறியுங்கள் ஜல்லிக்கட்டுடன் உங்கள் வாழ்வோடு மல்லுக்கட்டும் ஏமாற்றுவாதிகளின் அனைத்துத் தடைகளையும் ...வாடி வாசலுக்கு மட்டுமல்ல மக்களின் எதிர்கால வாழ்க்கை வாசலுக்கும் தடை நீக்கப்பட வேண்டும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? வாழ்க உங்கள் அறவழி போராட்டம்! தொடர்க உங்கள் அரசியல் தேரோட்டம்
ஜெயசெல்வன்
ஆசிரியர்
தமிழுலகம்