உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண் என்ற பெருமையை 18 வயதான ஜெஸிக்கா பார்டோ பெற்றுள்ளார். இங்கிலாந்தின் மிக உயரமான கால்பந்தாட்ட வீரரான பீட்டர் குரோச்சை விட இவர் உயரமானவர். ஜெஸிக்கா 6 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். இவரது கவலை என்னவென்றால் தனது உயரத்திற்கு ஏற்ற ஆடை வாங்க முடியாதுள்ளதாம்.

மற்றும் தனக்க விருப்பமான காலணியை அணிய முடியாதுள்ளதாம். இவருடைய காலணியின் அளவு 11 அடியாகும். எனவே இணையம் மூலம் தனக்கென பிரத்தியேகமாக காலணியை கொள்வனவு செய்கிறார். ஆனால் தனது உயரம் குறித்து இவர் பெருமைப்படுகிறார்.

இந்த உயரம் என்னை மேலும் பிரபலப்படுத்துகின்றது. இந்த வித்தியாசம் குறித்து நான் கவலைப்படவில்லை. இதனால் அதிக நன்மைகளே ஏற்படுகிறது. இந்த மாதம் இவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் இவரை பெருமைப்படுத்தும்முகமாக இவருக்காக பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ‘The 8 foot Girl At Wakestock 2011’ என்ற பெயரைக் கொண்ட பேஸ்புக் பக்கத்தில் இவருக்கு கிட்டத்தட்ட 4 ஆயிரம் இரசிகர்கள் உள்ளனர். ஜெஸிக்காவின் தாயான லிசா (41) 6 அடி உயரம் கொண்டவர். அதேவேளை அவரது தந்தை அன்ரூ (43) 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர். இவர் 18 மாதக்குழந்தையாக இருக்கும் போது மற்ற குழந்தைகளை விட உயரம் கூடியவராக காணப்பட்டார் என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Tamil Ulagam Search