ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

இருமல் சளிக்கு கை கண்ட மருந்து கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .
நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம்

கற்பூரவள்ளி (கோலியஸ் ஆறோமத்திக்குச்) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.


வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.

கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.

பயன்கள்:

கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காச்சல் தணிக்கும் மருந்தாகும்.

இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.

இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும். இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.

கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.


குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த:

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.

அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படு

குளிர்ச்சியான வானிலையின்போது, நன்கு சூடாகவும், உடலுக்கு இதமாகவும் இருக்க டீ போட்டு குடித்தால் நன்றாக இருக்கும். அதிலும் சாதாரண பால் டீயை விட, மூலிகை டீ போட்டு குடித்தால், குளிர்ச்சியான வானிலையின்போது ஏற்படும் இருமல், ஜலதோஷம் போன்றவை வராமல் இருக்கும்.

அதிலும் அக்காலத்தில் இருமலைப் போக்கப் பயன்படும் கற்பூரவள்ளியைக் கொண்டு டீ போட்டு குடித்தால், இன்னும் நன்றாக இருக்கும். இப்போது அந்த கற்பூரவள்ளி டீயை எப்படி செய்வதென்று பார்ப்போம்.


இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ


தேவையான பொருட்கள்:-

உலர்ந்த கற்பூரவள்ளி இலை – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
தேன் – தேவையான அளவு

செய்முறை:-


ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, தண்ணீரை கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் கற்பூரவள்ளி இலையைப் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த இலையை நீக்கி விட்டு, அதனை மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு தேனை சேர்த்து கலந்தால், சுவையான கற்பூரவள்ளி டீ ரெடி.

குறிப்பு:-

உலர்ந்த கற்பூரவள்ளி இலையை அடுப்பில் தண்ணீர் கொதிக்கும் போதே போட வேண்டாம். இல்லாவிட்டால், அது டீயின் சுவையையே மாற்றிவிடும். ஒருவேளை உலர்ந்த கற்பூரவள்ளி இலை கிடைக்காவிட்டால், பச்சை இலையை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, தேன் சேர்த்து குடிக்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search