ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

இந்திய ரஷ்ய கூட்டணியில் தரையிலும், தண்ணீரிலும் செல்லும் ஏரோபோட்!


தரையிலும், தண்ணீரிலும் Water செல்லும் விசேஷ தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட ஏரோபோட் என்ற படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனமும் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த புதிய ஏரோபோட் Aeroboat பற்றிய தகவல்களை தொடர்ந்து காணலாம்.


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஸ்டார்ப் அப் நிறுவனங்களுக்கான கண்காட்சியில் இந்த ஏரோபோட் என்ற புதுமையான படகு அறிமுகம் செய்யப்பட்டது. ரஷ்ய அரசின் கீழ் செயல்படும் ஸ்கோல்கோவோ என்ற அறக்கட்டளை சார்பில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த ஏரோபோட் படகு மாதிரியை ஐஐஏஏடி ஹோல்டிங்ஸ் என்ற ரஷ்ய நிறுவனமும், மில்லெனியம் ஏரோடைனமிக்ஸ் என்ற இந்திய நிறுவனமும் இணைந்து உருவாக்கி இருக்கின்றன.

தரையிலும், தண்ணீரிலும் செல்வது மட்டுமல்லாமல் மிக மோசமான நிலை அமைப்புகளிலும், மணல் சார்ந்த பகுதிகளிலும் இதனை எளிதாக செலுத்த முடியும். எனவே, உலகின் முதல் ஹைப்ரிட் ஏரோபோட் வகை வாகனமாக தெரிவிகக்கப்பட்டு இருக்கிறது.இந்த ஏரோபோட் படகு சதுப்பு நில பகுதிகளிலும் செலுத்த முடியும் என்பது சிறப்பு. இந்த ஏரோபோட் வாகனத்திற்கு இந்தியாவில் அரசு சார்பிலும், தனியார் சார்பில் இருந்தும் 25 ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த வாகனத்தை பேரிடர் மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவான அம்சங்களை பெற்றிருக்கிறது. இதுவரை 5 ஏரோபோட் வாகனங்கள் பேரிடர் மீட்பு மற்றும் போக்குவரத்து பயன்பாட்டிற்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக இதனை உருவாக்கிய நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுக்ரித் சரண் தெரிவித்துள்ளார்

பருவமழை காலங்களில் ஏற்படும் இயற்கை பேரிடர் சமயங்களில் சிக்கிக் கொள்வோரை மீட்பதற்கு இந்த படகுகள் வெகுவாக பயன்படும் என்றும் அவர் தெரிவித்ததுடன், நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக இது இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏரோபோட் படகுகள் ஹோவர்கிராஃப்ட்டை விட அதிவேகத்தில் செல்லும். எனவே, மிக விரைவான மீட்புப் பணிகளுக்கு உதவும். ரஷ்ய அரசின் அவசரகால மீட்பு வாகனமாக இது செயல்படும்.

ஏரோபோட் வாகனம் மணிக்கு 150 கிமீ வேகம் வரை செல்லும். அதேநேரத்தில், ஹோவர்கிராஃப்ட் வாகனமானது மணிக்கு 45 கிமீ வேகம் முதல் 50 கிமீ வேகம் வரை செல்லும்.இந்த வாகனத்துக்கு ஆண்டுக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை பராமரிப்பு செலவு இருக்கும். இந்த வாகனம் ஹைப்ரிட் எரிபொருள் வகையில் இயங்கும். பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்மோட்டார்களில் இயங்குகிறது.

இந்த வாகனத்தில் ஐஓடி என்ற இணைய வசதி தொழில்நுட்பம் உள்ளது. இதன்மூலமாக, இந்த வாகனத்தில் ஏற்பட்டிருக்கும் பழுது குறித்த விபரங்களை தயாரிப்பு நிறுவனம் தங்களது நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும் என்பதோடு, பழுது நீக்கவும் முடியும்.இந்த வாகனத்தில் 10 பேர் வரை பயணிக்க முடியும். ஒருவர் இயக்க முடியும். செங்குத்தான சாலை மற்றும் நில அமைப்புகளிலும் இந்த ஏரோபோட் எளிதாக செல்ல முடியும். ஹோவர்கிராஃப்ட்டுகளை இயக்குவதற்கான மற்றும் பராமரிப்பு செலவீனம் மிக அதிகம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search