-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

பிச்சாவரம் - தமிழக சுற்றுலா தலங்கள் !

கடலூரின் முக்கிய சுற்றுலாத் தலமாக பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் விளங்குகின்றன. உலகிலேயே இரண்டாவது மிகப் பெரியதாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் கருதப்படுகின்றன.

இது சிதம்பரத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. குறுக்கும் நெடுக்குமாக இங்கு செல்லும் எண்ணற்ற சிறு சிறு தீவுக்கூட்டங்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் வெளிநாட்டு பறவைகளின் தங்குமிடமாக அமைந்திருக்கின்றன.

வாட்டர் ஸ்னிப்ஸ், ஹெரான், பெலிகன், கார்மோரான்ட்ஸ் மற்றும் ஈக்ரெட் ஆகியவை அவற்றில் சில குறிப்பிடத்தக்க பறவை வகைகளாகும்.


செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலும் மற்றும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் உலகெங்கிலும் உள்ள பறவை கவனிப்பாளர்களை ஈர்க்கும் இடமாக இந்த காடுகள் உள்ளன. இந்த காடுகளுக்குள் படகுப் பயணம் செய்து சுற்றிப் பார்க்க முடியும் என்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு அம்சமாகும்.



 தனிச்சிறப்பு:

மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளுக்கு நிகரான கடல் முகத்துவாரம். மாங்குரோவ் வகைக் காடுகள்.



அருகாமை:

சிதம்பரத்திலிருந்து 16கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

தங்குமிடம்:

தமிழ்நாடு வனத்துறையின் கெஸ்ட் ஹவுஸ், ஹோட்டல் அக்‌ஷயா போன்ற இடங்கள்.

DO You Need Web Site?