ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள சில வழிகள்

பொதுவாக, அளவுக்கு அதிகமான தசைகளோடு கட்டுக்கோப்பான உடலை பெறுவதற்கே ஆண்கள் விரும்புவார்கள். நல்ல கட்டமைப்புடன் கூடிய எந்த ஒரு ஆண்மகனுக்கும் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை ஏற்படுவது இயல்பு தான். வெளியில் செல்லும் போது
வலுவுள்ளவராக உணர்வீர்கள். மேலும் உங்கள் தோற்றத்தை கண்டு மகிழ்வீர்கள். இதுவே பெண்க என்றால் எழும்பும் தோலுமாக சைஸ் ஜீரோ உடல் அமைப்பை பெற விரும்புகின்றனர். ஆரோக்கியமான திடமான உடலமைப்பை பெற்ற ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர். நீங்கள் சரியான உடல் கட்டமைப்புடன் திகழ்ந்தால் பல பெண்களின் கவனத்தை பெறுவீர்கள். நாம் சொன்னதை போல திடமான கட்டமைப்பை கொண்ட ஆண்களை தான் பெண்கள் விரும்புவார்கள். அப்படியானால் என்ன அர்த்தம்? கண்டிப்பாக உங்களாலும் உடலை அப்படி கட்டுக்கோப்பாக மாற்றியமைக்க முடியும் தானே? நல்ல உடல் கட்டமைப்பு, சீரான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு உங்களை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ வைக்கும். யாருக்குமே தொந்தியும் தொப்பையுமாக இருக்கும் ஆண்களை பிடிப்பதில்லை. அதே போல் ஆங்காங்கே தொங்கும் தசைகளை காணும் போதும் உங்களின் மோசமான வாழ்க்கை முறையை அது பிரதிபலிக்கும். கட்டுக்கோப்பான உடலை பெற வேண்டுமானால் நீங்கள் உண்ணும் உணவின் மீது கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியமான புரதச்சத்துள்ள மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை எப்போதும் உன்ன வேண்டும்.
நல்ல கட்டமைப்புடன் கூடிய உடலை பெற அதிக புரதச்சத்துள்ள முட்டை, மெல்லிய இறைச்சிகள், ஆல்மண்ட், முளைத்த பயறுகள் போன்றவைகளை உட்கொள்ள வேண்டும். இவ்வகை ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடலில் அளவுக்கு அதிகமான புரதத்தை சேர்க்கும். மேலும் தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ராலை தவிர்க்கும். இது போக அரிசி சாதத்திற்கு பதிலாக முழு தானியங்களையே உட்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கார்போஹைட்ரேட்ஸ்களையும் தவிர்க்கலாம். உங்களை பசியை மெதுவாக நிரப்பும் உணவுகளான ஓட்ஸ், கோதுமை, பழுப்பு அரிசி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இது நீங்கள் எடுத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்புகளை எரிக்க உதவும்.

முட்டையின் வெள்ளை கருஉடலை கட்டுக்கோப்பாக வளர்க்கவும் தசைகளை பராமரிக்கவும் தேவைப்படும் 8 வகையான அமினோ அமிலங்கள் அனைத்தும் ஒவ்வொரு முட்டையிலும் உள்ளது. இது போக முட்டையில், தசை திசுக்கள் ஆறுவதற்கும் அதன் மறு வளர்ச்சிக்கும் தேவைப்படும் வைட்டமின்கள், அமிலங்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களும் உள்ளது. முட்டையின் வெள்ளை கருவில் கொழுப்பே கிடையாது. இதனால் உங்கள் உணவில் கொழுப்பு சேராது. முட்டையின் மஞ்சள் கருவில் தான் அனைத்து கொழுப்புகளும் அடங்கியுள்ளது.

ஓட்ஸ் கஞ்சிகாலை உணவிற்கு ஓட்ஸ் கஞ்சி குடிப்பது உங்கள் பொழுதை ஆரம்பிக்க உகந்ததாக இருக்கும். அதிலுள்ள நார்ச்சத்து உங்கள் உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைத்து உட்சேர்க்கைக்குரிய செயல்முறையை அதிகரிக்க உதவும். மேலும் இது உங்கள் உடலில் உள்ள க்ளைகோஜென் கிடங்கை நிறைவாக்கும். உடற்பயிற்சி செய்த பின் எடுத்துக் கொள்ள சிறந்த உணவாகும் இது விளங்குகிறது.

வே புரோட்டீன் (Whey Protein)வே புரோட்டீன் என்பது உடலை கட்டுக்கோப்பாக வளர்ப்பவர்களுக்கு சிறந்த உணவாக விளங்குகிறது. உடற்பயிற்சி செய்த பின் அதிக தரத்துடன் கூடிய இந்த புரதத்தை பருகினால் உங்கள் உடல் இதனை உடனே ஈர்த்துக் கொள்ளும். இதனை ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரோடு கலந்து குடித்தால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். இது தசை சிதைவை நிறுத்தி தசை வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
 
மெல்லிய சிகப்பு இறைச்சி 
மெல்லிய மாட்டிறைச்சி மற்றும் இதர மெல்லிய சிகப்பு இறைச்சிகள் உடலை வளர்ப்பவர்களுக்கு சிறந்த உணவுகளாக விளங்குகிறது. மெல்லிய சிகப்பு இறைச்சியில் புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B வளமையாக உள்ளது. சிகப்பு இறைச்சியில் அதிகளவில் கலோரிகள் அடங்கியுள்ளது. அதனால் தீவிரமாக உடலை உருமாற்றி, கட்டமைப்புடன் உடலை வைக்க விரும்புபவர்களுக்கு இது ஏற்ற உணவாக இருக்கும்.

பீன்ஸ் மற்றும் பட்டாணி வகைகள் 
உடல் வளர்ச்சிக்கு சிவப்பு இறைச்சி மற்றும் முட்டை மட்டுமே போதுமானது அல்ல. இதற்காக பீன்ஸ் மற்றும் பட்டாணி வகைகளின் பங்களிப்பை யாரும் ஒதுக்கி விட முடியாது. அவைகளில் தாவர புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக அடங்கியுள்ளது. அதிலும் கிட்னி பீன்ஸ் இதற்கு புகழ் பெற்று விளங்குகிறது. ஒரு கப் கிட்னி பீன்ஸ் 14 கிராம் புரதத்தையும் நார்ச்சத்தையும் அளிக்கிறது.

மீன் 
உடலுக்கு ஒமேகா-3 போன்ற சில அதிமுக்கிய கொழுப்பமிலங்களும் தேவைப்பட தான் செய்யும். இது தசை வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். இருப்பினும் ட்ரான்ஸ் வகை கொழுப்புகள் மற்றும் பூரிதக் கொழுப்புகளை தவிர்க்க தான் வேண்டும். ஆனால் மீன்களில் உள்ள அதிமுக்கிய கொழுப்புகளை ஒதுக்க கூடாது. குளிர்ந்த நீரில் வளரும் மீன்களான சால்மன், ட்யூனா, ட்ரௌட் மற்றும் சாலை மீன்களில் அதிக அளவில் புரதமும் ஆரோக்கியமான கொழுப்புகளும் அடங்கியுள்ளது.

ப்ராக்கோலி 
மெல்லிய தேகத்தை விரும்புபவர்கள் தங்கள் உணவில் ப்ராக்கோலியை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக அதிலுள்ள வைட்டமின் சி, திசுக்கள் நீடித்து வாழ பாதுகாக்கும். மேலும் கரையும் இயல்புள்ள நார்ச்சத்துக்களை போதுமான அளவில் கொடுக்கும். இது உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் நிரப்பி விடும். இது மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடை குறைவுக்கு துணை நிற்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search