ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

விண்வெளி வாழ்க்கை - சில சுவாரஸ்யமான உண்மைகள்!

சாதாரண மனிதனுக்கு விண்வெளியின் வாழ்க்கையை அனுபவிக்கும் வசதி எளிதில் கிட்டுவதில்லை. விண்வெளி ஆய்வாளர்கள் அல்லது விண்வெளி வீரர்கள் மட்டுமே இந்த அனுபவங்களை சில நாட்களுக்கு தங்களுடைய விண்வெளி பயனத்தின் ஒரு பகுதியாக
பெறும் வல்லமை பெற்றவர்களாக உள்ளனர். நாம் விண்வெளியில் உயிரினங்கள் வாழ முடியாது என்று பந்தயம் கட்டினாலும், அங்கு சென்று சாகசங்கள் செய்ய பலரும் தயாராக உள்ளனர். இந்த சாகச பயணங்களை செய்ய வேண்டாம் என்று கருதுபவர்கள், விண்வெளி வாழ்க்கை பெற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவாவது விரும்புவர்கள். இங்கே விண்வெளி வாழ்க்கையைப் பற்றி சில விந்தையான ஆர்வமூட்டும் தகவல்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

சூரிய உதயங்கள்! 

நீங்கள் விண்வெளியில் இருக்கும் போது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சூரிய உதயத்தை பார்க்க முடியும். இதனால் தான் விண்வெளி வீரர்களின் தூக்கத்தில் ஏராளமான பிரச்னைகள் உருவாகின்றன. சாதாரணமாக இருக்கும் பகல் மற்றும் இரவு வேளைகள் இல்லாததால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. சர்வதேச விண்வெள தளத்தின் நிர்வாகிகள் இந்த பிரச்னைக்கு ஒரு புதுமையான தீர்வு கண்டுள்ளனர். அவர்கள் விண்வெளி வீரர்களுக்காக 24 மணி நேர அட்டவணையை தயார் செய்துள்ளனர். பூமி நேரத்தை அடிப்படையாக கொண்ட இந்த கால அட்டவணைப்படி அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள்.உடற்கூறு மாற்றங்கள் 

விண்வெளியில் உள்ள மிகவும் குறைந்த புவிஈர்ப்பு விசை காரணமாக நமது முதுகெலும்பு பூமியில் பெற்று வரும் தொடர்ச்சியான அழுத்தம் விடுபட்டு விடும். அதன் காரணமாக விண்வெளி வீரர்களின் முதுகெலும்பு நேராக நிமிர்ந்து, சுமார் 2.25 அங்குல அளவிற்கு அவர்களுடைய உயரம் அதிகரிக்கும். விண்வெளி சுகவீனம் விண்வெளிக்கு சென்று விட்டு திரும்பும் வீரர்களின் உடல் நிலை 2-3 நாட்களுக்கு சுகவீனமாக இருக்கும். விண்வெளியில் குறைவான புவிஈர்ப்பு விசை இருந்ததான் காரணமாகவும் மற்றும் விண்வெளிக்கு யார் சென்றாலும் ஏற்படும் சாதாரண விஷயமாகவும் இது உள்ளது.


தூக்கம் 

விண்வெளிக்கலத்தில் தூக்கம் என்பது ஒரு சிக்கலான விஷயமாகும். விண்வெளியில் சிறிது நேரமாவது தூங்க நினைக்கும் விண்வெளி வீரர்கள் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். அவர்கள் தங்களை ஒரு பட்டைக்குள் புகுத்திக் கொண்டு - மிதப்பதையும், மற்ற பொருட்களுடன் மோதுவதையும் தவிர்த்துக் கொண்டு தூங்குவார்கள். ஆடை அணிகள் விண்வெளியில் ஒவ்வொருவருடைய ஆடை அணிகலன்களை சரி செய்வது என்பது சவாலான காரியம் தான். விண்வெளி வீரர்கள் தங்களுக்கான பிரத்யோகமான உடைகளை கொண்டு சென்று, கலத்தின் சுவர்களில் உள்ள லாக்கர்களிலும், பிற பொருத்தும் இடங்களிலும் வைப்பார்கள். துங்களுடைய முடிகளை அலசுவதற்கு அவசியம் இல்லாத ஒரு வகையான ஷாம்பூவை கொண்டு சுத்தம் செய்வார்கள். உணவுப் பழக்கங்கள் விண்வெளியில் புவிஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால் உப்பு மற்றும் மிளகு போன்றவற்றை தெளிக்க முடியாது. எனவே அவர்கள் திரவ உணவுகளை சாப்பிடுகிறார்கள். திட உணவுகள் மிதந்து சென்று ஏதாவது ஒரு இயந்திர பகுதிக்குள் சிக்கிக் கொள்ளவோ அல்லது விண்வெளி வீரரின் கண்களை தாக்கவோ வாய்ப்புகள் உள்ளன. 

காஸ்மிக் கதிர்வீச்சுகள் 

கருமையான விண்வெளியின் பரந்த வெளி பரப்பில் நீல நிறத்தில் காட்சியளிக்கும் பூமியை விண்வெளி வீரர்களால் காண முடியும். மேலும், அவர்கள் நிலவின் பின் பகுதியை பார்க்கவும், நிலவில் பட்டுத் தெறிக்கும் வித்தியாசமான வெளிச்சங்களை அவர்களுடைய கருவிழிகளால் உணரவும் கூடிய அனுபவங்களை பெற்றிருப்பார்கள். மூளையில் என்ன நடக்கும்? அறிவியலாய்வாளர்கள் எவ்வளவு தான் பரிசோதனைகள் செய்து விண்வெளி வீரர்களின் அழுத்தத்தை தாங்கும் திறன்களை சோதித்தாலும், நீண்ட நாட்களுக்கு விண்வெளியில் பயணம் செய்ய நேரிட்டால் மூளை பாதிக்கப்படும் என்பதை மறுக்க முடியவில்லை. ஏனெனில், விண்வெளியில் உலவி வரும் காஸ்மிக் கதிர்கள் மூளையைத் தாக்க வல்லவையாகும். கழிப்பறைகள் விண்வெளியில் கழிப்பறைகளை பயன்படுத்துவது என்பது சவாலான காரியம் தான். பல்வேறு விண்வெளி ஆய்வு நிறுவனங்களம் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் பொருட்டாக பல மணி நேரங்களை செலவிட்டுள்ளன. முன்னதாக, விண்வெளி கழிப்பறைகள் காற்றை அடிப்படையாக கொண்டு இயங்கி வந்தன. எனினும், தற்போதைய ஏர் பில்டரிங் முறையும் முன்பையொத்த முறையாகவே உள்ளது.

மீண்டும் பூமி வாழ்க்கை... 

விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பிய பின்னர், பூமியின் புவிஈர்ப்பு விசையுடன் பழகுவதற்கு நெடுநேரம் எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் விண்வெளியில் பொருட்களை கீழே போடுவதைப் போலவே, பூமியில் போட்டு பொருட்களை உடைக்கவும் செய்வார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search