-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

உலகின் மெகா உளவாளிகள்

'சாண் பிசகினால் சட்னி' என் பதே ஒற்றன் வாழ்க்கை. மன்னர் காலத்தில் சாளரம் வழி ஒட்டுக்கேட்ட இவர்கள், ஹைடெக் காலத்தில் டெக் னாலஜியில் பின்னுகிறார்கள்.

மார்கரீடா கீர்துரிடா: இவர் ஒரு செக்ஸ் சிம்பல். வசீகர வளைவுக ளால் எவரையும் துவம்சம் செய்யும் அழகி.
மேடைகளில் அரைகுறை யாக ஆடிப் புகழ்பெற்ற இந்த அழகிய பெண் ஓர் உளவாளி என்று யாருமே நினைத்திருக்க வில்லை. முதல் உலகப் போர் காலத்தில் பல பேர் யுத்தக் களத்தில் புரள, இவருடைய முத்தக் குளத்தில் புரண்டனர் ராணுவத்தினரும், அரசியல் வாதிகளும். எல்லோரிடமும் விளையாடி விஷயத்தைக் கறந்தார். அதை அப்படியே பிரான்சுக்கு அனுப்பினார். கடைசியில் 1917 பிப்ரவரி 13-ம் நாள் பாரீஸில் கைதான இந்த சுட்டும் விழிச் சுடர், இறுதியில் சுட்டுக் கொல்லப் பட்டார்!

ரிச்சர்ட் சோர்ஜ்: சோவியத் யூனியனின் அல்டிமேட் உளவாளி இவர். இரண்டாம் உலகப் போர் காலத்தின் தலைவன்தான் கிங். இவருடைய சொந்தக்காரர் ஒருவர் கார்ல் மார்க்ஸின் நெருங்கிய நண்பர். அதனால் மார்க்ஸ் பற்றி ஐயாவுக்கு நிறையத் தெரியும். பத்திரிகையாளர் போர்வையில் இவர் நடத்திய தில்லாலங்கடிகள் ரஷ்யாவுக்குப் பக்கபலம். ஜெர்மனியிலும், ஜப்பானிலும் ஒற்றனாகப் பட்டையைக் கிளப்பினார். ஆனால், ஜப்பானுக்கு இவர் மீது சந்தேகம் வந்து பொறிவைத்தது. மர்ம ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணித்து 1941-ல் கைது செய்யப்பட்டார்.ஆனால், அவர்களால் எதையும் நிரூபிக்க முடிய வில்லை. ரிச்சர்ட் சோர்ஜ் கல்லுளிமங்கன்.துண்டு துண்டாக வெட்டினால்கூட ஒரு வார்த்தை விழாது என்று இருந்துவிட்டார்.
'எங்கள் ஒற்றனை விடுவி, உங்கள் ஒற்றனை நாங்கள் விடுவிக்கிறோம்' என ஜப்பான் சோவியத் துடன் பேரம் பேசியது. ஆனால், 'சோர்ஜா... யாருப்பா அது? எங்களுக்குத் தெரியாதே' என டகால்டி காட்டியது ரஷ்யா. எந்த நாட்டு உளவாளி என்று தெரியாமலேயே 1944 நவம்பர் 7-ம் தேதி சோர்ஜ் தூக்கிலிடப்பட்டார். 20 வருடங்களுக்குப் பிறகு 1964-ல்தான் சோவியத் 'சோர்ஜ் தன்னோட ஆள்' எனும் உண்மையை ஒப்புக் கொண்டது!


 நேதன் ஹாலே: அமெரிக்காவின் முதல் அதிகாரபூர்வஉள வாளிஇவர்தான். அமெரிக் கப் புரட்சி நடந்த காலத்தில் பிரிட்டனின் திட்டங்களை உளவுபார்ப்பதுதான் இவரது வேலை. பல அதிரடித் தகவல் களை அமெரிக்காவுக்கு வழங்கிய இவர் சீக்கிரத்தி லேயே பிடிபட்டார். தூக்குமேடையில் 'கடைசியாக என்ன சொல்ல விரும்புகி றாய்?' என கேட்கப்பட்ட போது, நேதன் ஹாலே சொன்ன பதில், 'என் நாட்டுக்காகக் கொடுக்க ஒரே ஒரு வாழ்க்கைதான் என்னிடம் இருக்கிறதே எனக் கலங்குகிறேன்'! அப்போது அவருடைய வயது 21. இதனாலேயே இப் போது வரை ஒரு ஹீரோவாகப் பார்க்கிறார்கள் மக்கள்.

பியூக்ஸ்: மண்டை பூரா மூளை என்பார்களே, அந்த ரகம். அணுகுண்டு தயாரிப்பு, ஆராய்ச்சி அனைத்திலும் கில்லாடி. தான் செய்யும் எல்லா ரகசிய வேலைகளையும் ரஷ்யாவுக்கு அனுப்பிவிடுவார். ஜெர்மனியில் பிறந்த ஒரு பிரிட் டிஷ்காரர் இவர். 

ஆனால், அமெரிக்காவோ இங்கிலாந்தோ என்ன செய்தாலும் அதை அறியும் உரிமை ரஷ்யாவுக்கு உண்டு என்பது இவரது கொள்கை. இவர் தரும் தகவல்களைவைத்தே அமெரிக்கா செய்வது போன்ற குண்டுகளை வடிவமைத்துக் குழப்பியது ரஷ்யா. உதாரணமாக, அமெரிக்கா தயாரித்த 'ஃபேட்மேன்' எனும் குண்டின் ஈயடிச்சான் காப்பிதான் ரஷ்யாவின் ஆர்.டி.எஸ்-1. கடைசியில் கையும் களவுமாக மாட்டி 14 ஆண்டுகள் உள்ளே போனார் பியூக்ஸ்!

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?