ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

மியான்மர் விடுதலைப் போராட்டத் தலைவர் - ஆங் சான் சூ கி

1945ல் மியான்மர் விடுதலைப் போராட்டத் தலைவரான ஜெனரல் ஆங் சான் கின் கி தம்பதியருக்குப் பிறந்தவர் ஆங் சான் சூ கி. படிக்க பிரிட்டன் சென்று அங்கேயே மிக்கேல் ஆரிஸ் என்பவரை மணம் முடித்துக் கொண்டார். மியான்மரில் 1962-லிருந்து ராணுவ ஆட்சி நடந்து வந்தது. 1988-ல் குடும்பச் சூழல் காரணமாக நாடு திரும்பிய சூகி, நாடு முழுவதும் இருந்த ராணுவ ஆட்சிக்கு எதிரான கொந்தளிப்பைக் கண்டு, 
தேசிய ஜனநாயக லீக்  கட்சியைத் துவங்கினார். ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தினார். இதனால், மக்களிடம் சூகியின் செல்வாக்கு மளமளவென உயரத் தொடங்கியது.


இதை எதிர்பாராத ராணுவ அரசு, பாதுகாப்பு காரணம் எனச்சொல்லி, 1989ஆ-ம் ஆண்டு சூகியை வீட்டுச் சிறையில் அடைத்தது. இது 1995ஆ-ம் ஆண்டு வரை நீடித்தது. இடையில் சில காலம் விடுவிக்கப்பட்டு, மீண்டும் வீட்டுச் சிறையில் தள்ளப்பட்டார் சூ கி. பல நாடுகளின் வற்புறுத்தலாலும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அமைப்புகளாலும் கண்டனத்துக்கு உள்ளான மியான்மர் ராணுவ அரசு, கடந்த நவம்பர் மதம் சூ கியை விடுவித்தது. கடந்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச்சிறையிலேயே காலத்தைக் கழித்திருக்கும் சூ கி,  65 வயதிலும் போராட்ட குணம் மாறாமல் தனது அடுத்த கட்ட அரசியல் யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார். ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போர்க்குரல் எழுப்பிவரும் சூ கி, மியான்மர் நாட்டு மக்களின் நம்பிக்கைச் சூரியன்!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search