-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

எவெரஸ்ட் ஐ பார்வையிட சுற்றுலா பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

நேபாளத்தில் புத்தா விமான போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த 10 இந்திய சுற்றுலா பயணிகள் உட்பட 19 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எவெரெஸ்ட்டை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற விமானமே லலித்பூர் மாவட்டம்
கோட்டந்தா மலைப் பகுதியில் மோதி திடீரென விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு பணியினர் விரைந்துள்ளனர். மேலும் மோசமான வானிலையாலேயே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.


நேபாளத்தில் இன்று காலை நிகழ்ந்த விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
நேபாளத்தில் இன்று காலை சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற சிறிய ரக விமானம் ஒன்று, இமயமலையை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பியபோது மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 19 பேர் பலியானதாகவும், அவர்களில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது,.
இந்நிலையில் இந்த 10 பேரில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் திருச்சி கட்டுமான சங்க உறுப்பினர்கள் ஆவார்கள். விபத்தில் பலியான மீனாட்சி சுந்தரம் என்பவர் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் ஆவார். மற்றொருவர் முன்னாள் அமைச்சர் செல்வராஜின் உறவினர் ஆவார்.
மீனாட்சி சுந்தரத்துடன் சென்ற மணிமாறன்,மருதாச்சலம், புகழேந்தி, கனகசபேசன், தியாகராஜன், காட்டூர் மகாலிங்கம்,ஆகியோரும் சென்று இருந்தனர்.அவர்களும் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.

DO You Need Web Site?