ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

இந்திய 'சவுர்யா' ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதத்தை சுமந்து சென்று தொலைதூர இலக்குகளை தாக்க கூடிய 'சவுர்யா' ஏவுகணை ஒரிசாவில் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரிசாவில் உள்ள சண்டிபூர் சோதனை தளத்தில், நேற்று மாலை இப்பரிசோதனை இடம்பெற்றது. ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில்
சென்று இலக்கை தாக்க கூடிய திறன் படைத்த 'சவுர்யா' ஏவுகணை 750 கி.மீ தூரம் வரை செல்ல கூடியதாக வடிவமைக்கப்பட்டது.

நேற்று விண்ணில் ஏவப்பட்டவுடன், சுமார் 485 விநாடிகள் பயணம் செய்து இலக்கை தாக்கியதால், இப்பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து இந்த ஏவுகணை விரைவில் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளது. சுமார் ஒரு டன் எடையுள்ள அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் படைத்த சவுர்யா ஏவுகணை தரையிலிருந்தும், நீர்மூழ்கி கப்பல் மூலம் தண்ணீருக்கு அடியிலிருந்தும் ஏவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search