-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

மணிக்கு 335 கிமீ வேகத்தில் செல்லும் சூப்பர் கார்

உலகம் முழுவதும் ஃபெராரி கார்கள் என்றாலே அதற்கு தனி மவுசும் அந்தஸ்தும் இருக்கிறது. வேகம், தரம், வடிவமைப்பு என அனைத்திலும் வாடிக்கையாளர்களிடம் 100க்கு 100 வாங்கியுள்ளது ஃபெராரி.

இந்த நிலையில், புதிய ஸ்போர்ட்ஸ் காரை பிராங்பர்ட்
ஷோவில் அறிமுகப்படுத்துவதாக கடந்த மாதம் ஃபெராரி அறிவித்தது. இதனால், வாடிக்கையாளர் மத்தியிலும், ஆட்டோமொபைல் துறையினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

இந்த நிலையில், 458 ஸ்பைடர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த காரை பிராங்பர்ட் ஷோவில் அறிமுகம் செய்தது ஃபெராரி. எதிர்பார்ப்பை விஞ்சும் வகையில் வடிவமைப்பு மற்றும் வசதிகளில் ஃபெராரியின் அக்மார்க் முத்திரை 458 ஸ்பைடரின் வடிவமைப்பிலும் தெரிந்தது.

திறந்து மூடும் வசதி கொண்ட கூரையுடன் வந்துள்ள இந்த காரின் கூரையை வெறும் 14 நொடிகளில் திறந்து மூடும் என்பது கூடுதல் அம்சம். மேலும், இதன் விசேஷமே இதன் பாடி வடிவமைப்பு. மணிக்கு 200 கிமீ வேகத்தில் சென்றால் கூட காற்று காக்பிட்டுக்குள் வராத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் 4.5 லிட்டர் வி-8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 570 பிஎச்பி ஆற்றலையும், 398 எல்பி-பீட் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

100 கிமீ வேகத்தை 3.4 வினாடிகளில் கடந்துவிடும் ஆற்றல் கொண்ட காரில் அதிகபட்ச வேகம் மணிக்கு 335 கிமீ வரை செல்லும் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.


மேலும், முன்பக்க பேனட்டில் சிறிய ஸ்டோரேஜ் அறையையும் கொண்டிருக்கிறது ஃபெராரி 458 ஸ்பைடர். எடையிலும் குறைவாக இருப்பதால் வேகத்திற்கும், பிக்கப்பிற்கும் கியாரண்டி. பார்முலா ஒன் கார்களுக்கு உள்ளதுபோன்ற பெடல் ஷிப்டர் உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் கார்களுக்கே உரிய அனைத்து அம்சங்களிலும் குறைவில்லாமல் வந்துள்ளது ஃபெராரி 458 ஸ்பைடர்.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?