மானிடப்படுகொலையாளருக்கு எதிராக அமெரிக்காவின் இராணுவம் செயற்படப்போகிறது.. அமெரிக்க அதிபர் அமைக்கும் புதிய அற்றோசிற்றி பிறவின்சன் போட்..
சென்ற வாரம் சிறீலங்காவின் வான்
பரப்பின்மீது அமெரிக்க விமானங்கள் சுமார் பத்துவரை பறந்து போனது தெரிந்ததே. இந்த விமானங்கள் தற்செயலாக சிறீலங்கா மீது பறப்பதற்கு யாதொரு முகாந்திரமும் கிடையாது. அதற்கான காரணங்கள் பல உள்ளன.முதலாவது உலக சமுதாயமும், ஐ.நாவும் சிறீலங்கா ஆட்சியாளரால் ஏமாற்றப்பட்டுள்ளன. கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் வன்னியில் நடைபெற்றது போரல்ல மானிடப் படுகொலைகளே.. அரசு என்ற காரணத்திற்காக.. இந்தியா துணையிருக்கிறது என்ற காரணத்திற்காக சிறீலங்கா மானிடப் படுகொலையின் திறந்தவெளி லைசென்சை கையில் எடுக்கவோ பயன்படுத்தவோ முடியாது.
இன்று அமெரிக்காவில் வெளியாகியுள்ள செய்தி ஈழத் தமிழ் மக்கள் வயிற்றில் பால் வார்க்கும் செய்தியாகும்..
சிறீலங்கா மட்டுமல்ல உலகின் எப்பகுதியானாலும் மானிடப் படுகொலைகளை செய்வோர், அதற்கான முஸ்தீபுகளில் தமது இராணுவத்தை முன் நகர்த்தும் கொடியவர்கள் அனைவருடைய கரங்களும் முறிக்கப்படப் போகின்றன.. இதுவரை தமிழர்கள் வராதா என்று கலங்கிய நாட்கள் கைகளுக்கு வரப்போகிறது. அதற்கான முதல் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடுக்கிவிட்டுள்ளார். அதன் பிரகாரம் உலகத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளை கண்காணிக்க அமெரிக்கா புதியதோர் குழுவை நியமிக்கப் போகிறது. அத்தகைய வரலாற்றுப் புகழ் மிக்க குழுவை அமைத்து பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதிகளில் முதலாவது சாதனை ஜனாதிபதியாக இடம் பெறப்போகிறார்.
இன்று வெளியான பென்டகன் செய்திகளின்படி திட்டமிட்ட முறையில் இன அழிப்பு செய்யும் ஆட்சியாளர்களை கண்காணித்து, அவர்கள் மீதான அமெரிக்க நடவடிக்கைகளை எடுக்கும் விசேட குழுவை அமெரிக்க அதிபர் அமைக்கவுள்ளார் என்று தெரிவிக்கிறது. அமெரிக்க பாதுகாப்புப் படைப்பிரிவின் அதிகாரிகள், ஒரு தொகுதி மந்திரிகள், பென்ரகன் அதிகாரிகள் கொண்ட ஆயமாக இது மலரும். அற்றோசிற்றி பிறவின்சன் போட் என்பது இதனுடைய பெயராகும்.
இனப்படுகொலைகளை செய்வோரை வெறுமனே கண்டிக்கப்படாமல் அவர்களுக்கு எதிராக வான் தாக்குதல் மூலம் உடன் நடவடிக்கை எடுப்பதற்கும் இது தயாராகும். வரும் 120 நாட்களுக்குள் இந்தச் சபை தனது பணிகளை ஆரம்பிக்கும்.
இதற்கான விசேட கருவிகளை பொருத்திய விமானங்கள் சம்மந்தப்பட்ட பகுதிகள் மீது கண்காணிப்பை நடாத்தும். இன ஒடுக்குமுறை, உளவுப்பிரிவுகளின் அட்டகாசம், கூலிக்குழுக்களின் கொலைகள் யாவும் மின்னல் வேகத்தில் பதிவுக்கு வரும். இதற்காக அதி நவீன கருவிகள் பொருத்திய விமானங்கள் செயற்படும். உளவு விமானங்கள் தரும் தகவலுக்கு அமைவாக சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பான முடிவுகளை இந்த ஆயம் மேற்கொள்ளும். இதன் ஓரங்கமாக வான்வழித் தாக்குதல்கள் நடாத்தப்பட வழியுள்ளதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவியில் இருக்கும்போதுதான் சிறீலங்காவின் இனப்படுகொலை நடைபெற்றது. மற்றும் சூடான், ஐவரிக்கோஸ்ட், ஏமன் போன்ற இடங்களில் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் லிபியாவில் இருந்துதான் இத்தகைய அநீதிகளை நேட்டோ தடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு முன்னர் சிறீலங்காவில் மாபெரும் தவறு நடந்துவிட்டது. எனினும் இந்தத் தவறுகளை இனியும் அமெரிக்கா அனுமதிக்கப்போவதில்லை என்று அந்தச் செய்தி வன்மையாக சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்க இராணுவப் போர்க்கல்லூரியின் உலக ஸ்திரத்தன்மைப் பிரிவு இதற்கான வேலைத்திட்டம் அடங்கிய கைநூலை 2007ம் ஆண்டிலேயே தயாரித்துவிட்டது. ஏ மிலிட்டரி பிளானிங் புக் என்ற பெயரில் இது வெளியாகியுள்ளது.
இன்றிரவு வெளியாகியுள்ள மேற்கண்ட செய்தி சிறீலங்கா மீது அமெரிக்க விமானங்கள் ஏன் பறந்தன என்ற கேள்விக்கு விடை தருவதுபோலவே அமைந்துள்ளன. இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் தம்மைக் காப்பாற்றும். அமெரிக்கா மட்டும் நாடல்ல என்று சிறீலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று கூறியிருந்தார்.
ஆனால்..
சீனாவுக்கு தெரியும்படியாகவே அமெரிக்க விமானங்கள் சிறீலங்கா மீது பறந்துள்ளன. இந்தியா வாய் மூடி மௌனியாக இருந்துள்ளது. இந்தப்பறப்பு சிறீலங்காவுக்கு சில செய்திகளைச் சொல்லப்போகிறது.
சனல் 4 வெளியிட்ட காணொளியை மறுத்து, சிறீலங்கா லங்காபுவத் செய்திபோல போலி விளையாட்டுக்களைக் காட்டி இனியும் காலம் ஓட்ட முடியாது. இந்தியா உன்னிப்பாக அவதானிப்பதாக ரீல் விட முடியாது. புத்தபிக்குகள் வீண் புலம்பல் புலம்ப முடியாது.
சிறீலங்காவில் நடந்த, நடக்கும் இன ஒடுக்குதல் அனைத்தும் உண்மையே..! அதை உடனடியாக உலகம் நிறுத்தும் நாட்கள் நெருங்குகின்றன..
சிறீலங்கா நடாத்தி முடித்த மானிடப்படுகொலைக்கான விலையை கொடுக்க வேண்டிய நாட்கள் விரைவாக இல்லை.. மிக விரைவாக நெருங்குகின்றன..
இனி மானிடப் படுகொலைகள் இல்லை.. என்ற அமெரிக்க அதிபரின் முடிவு ஈழத் தமிழருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆறுதல்…வெற்றியாகும்..
அதமட்டுமல்ல..
நடந்த மானிடப்படுகொலைக்கும் சிறீலங்கா விலை கொடுக்க வேண்டிய நிலை வரும்.. என்ற அமெரிக்காவின் உறுதி இன்னொரு ஆறுதல்..
தமிழருக்கு நீதி கிடைக்கும் நாட்கள் நெருங்குகின்றன..
ஐ.நாவும், சீனாவும் உள்ளன.. போர்க்குற்ற நீதிமன்றில் நாம் நம்மை பதியவில்லை என்ற சிங்கள அரசியல் தலைவர்களின் வாதம் செல்லாக்காசாகப் போகிறது..
பின்லேடனுடன் முடிவடைந்த பயங்கரவாதத்திற்கு எதிரான சூறாவளி இனி அரச பயங்கரவாதத்திற்கு எதிராக வீசப்போகிறது..
அதற்கான அதிர்வலையே அமெரிக்க விமானங்களின் சிறீலங்கா மீதான பறப்பு என்று ஏன் கூற முடியாது..
அமெரிக்கா மட்டும் இதைச் செய்தால் ஒடுக்கப்பட்ட உலக இனங்களுக்கு அதைவிட பெரிய நன்மை வேறென்ன இருக்கப்போகிறது…
நல்வரவாகட்டும் அற்றோசிற்றி பிறவின்சன் போட் !
0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.