உலகின் அதிவேகமாக செல்லும் கார் என்ற பெருமையை பெற்ற புகாட்டி வேரோன் சாதனையை, விரைவில் வர இருக்கும் லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் கார் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அவென்டேடார் சூப்பர் கார் விரைவில் துவங்க
இருக்கும் பிராங்பர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய அவென்டேடார் காரில் 1,000 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருப்பதாக யூக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சமீபத்தில் அவென்டேடார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களில், இந்த கார் அதிவேகத்தில் செல்லும் வகையில் புதிய வீல் டிஸ்க் மற்றும் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
புகாட்டி வேரோன் போன்றே இதிலும் இரட்டை சைலன்சர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அவென்டடாரின் இன்னும் பிற முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
தற்போது உலகின் அதிவேகத்தில் செல்லும் கார் என்ற பெருமையை பெற்றுள்ள புகாட்டி நிறுவனத்தின் வேரோன் சூப்பர் கார் மணிக்கு 431.07 கிமீ வேகத்தில் சென்று சாதனை புரிந்தது.
இந்த சாதனையை புதிய லம்போர்கினி அவென்டேடார் முறியடிக்குமா என்பதை தெரிந்துகொள்ள பிராங்க்பர்ட் மோட்டார் ஷோ துவங்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.