பசியோடும் பட்டினியோடும் பலகோடி இந்திய மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கையில் அந்த தியாகத்தில் பல்லாயியிரம் கோடி மருந்துகள் பல நாடுகளுக்கும் பறந்து செல்லும்.....
வருமான இழப்பு, வாடகை இழப்பு, வங்கிகளுக்கான கடன் தேக்கம் மற்றும் தேவையற்ற வட்டி, குருவிகளாய் கூண்டுக்குள்
அடைபட்டிருக்கும் மகிழ்ச்சியை தொலைத்த மக்கள், பல பேருக்கு மீண்டும் வேலை கிடைக்குமா என்ற சந்தேகம், எதிர்காலத்தை நினைத்த ஏக்கமும் நிகழ்காலத்தை நினைத்த கலக்கமும் என்று இருக்கும் மக்களுக்கு அரசாங்கம் என்ற வகையிலே எத்தகைய உதவிகளும் கிடைக்காது நம்பிக்கையிழந்து மக்கள் - என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் எங்களுக்கெல்லாம் ...

அறுபது கோடிகளுக்கு அதிகமான பரிதாபத்துக்குரிய மக்களை நோக்கி மனிதாபிமானம் வராதா?
எங்கோ இருக்கும் அமெரிக்கனுக்கும் ஐரோப்பியனுக்கும் பரிதாபப் படுகிறீர்களே! கண்முன்னே நிற்கும் ஒட்டிய வயிறுகளும் உலர்ந்த தேகமும் கலங்கிய கண்களும் பட்டினிச் சாவுகளும் உங்களுக்கு தெரியவில்லையா.. உங்கள் மனம் பதறவில்லையா ....
சொல்வதையெல்லாம் கிளிப் பிள்ளைபோல் கேட்கும் இந்த இந்திய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவது உங்கள் கடமையல்லவா..
நண்பர் ஆளும் தேசத்தை மிரட்டிக் கேட்டாவது மருந்து வாங்கி அமெரிக்க மக்களை காப்பாற்றுகிறாரே... அவரின் நண்பரல்லவா நீங்கள் இந்தியர்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து காப்பாற்ற என்ன செய்யப் போகிறீர்கள் ...
மதிப்பிற்குரிய உங்களிடமிருந்து மன்னிப்பு தேவையில்லை எங்களின் வரிப்பணத்தில் எங்களுக்காக எதையாவது செய்வீர்களா...
காத்திருக்கிறோம் ..மக்களின் கவலைகளை தீர்ப்பீர்களா என்று ......
- ஜெயசெல்வன்
- ஜெயசெல்வன்
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?