
கூலி தொழிலாளிகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் காதர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால், தமிழகம் முழுக்க முதலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. எனவே காதர் வீட்டில் தங்கி உள்ள கூலித் தொழிலாளிகள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், 15 வீடுகளின் வாடகையும் தனக்கு வேண்டாம் என்று, தானாக முன்வந்து பெருந்தன்மையாக அறிவித்துள்ளார் காதர். "கொரோனா வைரசால், மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவி இது என்கிறார் காதர். இதுபற்றி அவர் கூறுகையில், கூலித் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. எனவே, சாப்பாடு, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு செலவிடத்தான், அவர்களிடம் உள்ள பணம் போதுமானதாக இருக்கிறது. எனவே அவர்களிடம் இந்த மாத வாடகையை தர வேண்டாம் என்று கூறியுள்ளேன்." இவ்வாறு காதர் தெரிவித்தார்.
இதுபற்றி, வாடகைக்கு குடிஇருக்கக்கூடிய லத்தீப் என்பவர், கூறுகையில், மாசாமாசம், சரியாக, வாடகை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இப்போது எங்களிடம் வாடகை கொடுப்பதற்கு பணம் இல்லை. வேலைக்கு செல்லவில்லை என்றால் வருமானம் எப்படி வரும்? இந்த நிலையில்தான் எங்கள் வீட்டின் உரிமையாளர் வாடகை வேண்டாம் என்று சொல்லியுள்ளார். இது சந்தோஷம்தான். இதைவைத்து சாப்பாட்டுக்கு நாங்கள் செலவிடுவோம் என்று தெரிவித்தார்.