தமிழக அரசின் கவனத்திற்கு - தற்போது ஏற்பட்டிருப்பது ஓர் தேசிய பேரிடர்.
இதற்கு முன் ஏற்பட்ட வெள்ளம், பூகம்பம் போன்ற பல்வேறு தேசிய பேரிடர்களின் போதெல்லாம் யாருக்கெல்லாம் உதவி தேவைப்பட்டதோ
அவர்களுக்கெல்லாம் பல்வேறு உதவிகள், நிவாரணங்கள் வழங்கப்பட்டன அந்தந்த மாநில அரசாங்கத்தினால்...
அவர்களுக்கெல்லாம் பல்வேறு உதவிகள், நிவாரணங்கள் வழங்கப்பட்டன அந்தந்த மாநில அரசாங்கத்தினால்...
ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் மிக மோசமான இந்த கொரோனா பேரிடருக்கு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் நிவாரண உதவிகள் அறிவித்திருப்பது நியாயமா?
குடும்ப அட்டை இல்லாமல் வருமானமின்றி தவிப்பவர்களுக்கு, வறுமைக்கு கோட்டுக்கு கீழே வாழ்பவர்களுக்கு வயிறு இல்லையா? அல்லது அவர்களுக்குத்தான் பசியெடுக்காதா?
வந்தாரை வாழ வைக்கும் நாடல்லவா நம் தமிழ்நாடு ? நம் தமிழ் நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தற்போது வருமானமின்றி வேலையின்றி தவிக்கும் குடும்பங்களின் பசிக்கு என்ன பதில் சொல்லப் போகிறது நம் தமிழக அரசு?
யார் வந்தாலும் சோறு போட்டு அனுப்பும் பரம்பரையல்லவா நம் தமிழ் பரம்பரை ... குடும்ப அட்டை இல்லை என்றால் அவர்களின் வயிறை காய போடலாமா? அவர்களுக்கு யார் நிவாரணம் அளிப்பது?
நம் தமிழகத்திலேயே நாடோடி பிழைப்பு நடத்தும் இனக்குழுக்கலும் உள்ளனரே... குடும்ப அட்டைக்கு அவர்கள் எங்கே செல்வார்கள் ? அவர்களின் வாழ்க்கைக்கு வழி என்ன?
வேலைக்காக இடம் மாறி இருப்பவர்களுக்கு, இதுவரை குடும்ப அட்டை பெறாத குடும்பங்களுக்கு வருமானம் வானத்திலிருந்து வருமா?
ஆகவே குடும்ப அட்டையை காரணம் காட்டி பலரையும் தவிர்க்காமல், தவிக்க விடாமல் கொடுக்கும் நிவாரணத்தை யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ அவர்கள் அனைவருக்கும் வழங்கி அரசாங்கம் உதவ வேண்டும். அதற்கென தனி தொலைபேசி / அலைபேசி எண்ணை வெளியிட வேண்டும்
கேஸ் மானியம் பெறுவோர், குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்திருப்போர், வாடகை வீட்டில் வசிப்போர்( வாடகை ரசீது / வாடகை ஒப்பந்தம்), மகளிர் குழுக்கடன் பெற்றிருப்போர், ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருப்போர் மற்றும் அதிகாரிகளின் நேரடி விசாரணை, VAO சான்று போன்ற பல்வேறு அலகைகளைக் கொண்டு குடும்ப அட்டை இல்லாதோருக்கு உதவிகள் வழங்கி உதவவேண்டும்.
- ஜெயசெல்வன்
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?
0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.