
மாலைத்தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கள் எழுந்தன. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது மாலைத்தீவுகள்.
அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கள் எழுந்தன. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது மாலைத்தீவுகள்.
மாலைத்தீவு அதிபர் முகமது நஷீத் கூறுகையில், இந்தியாவிற்கு மாலைத்தீவு எப்போதும் நண்பனாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். இந்தியாவை விட சிறந்த நட்பு நாடு இனிமேல் வர முடியாது என கூறினார்.
மேலும் அவர் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மாலைத்தீவு எப்போதும் செயல்படாது. நெருக்கடி காலங்களில் மாலைத்தீவுக்கு இந்தியா நிறைய உதவி அளித்துள்ளதை எங்களால் நன்றி மறக்க இயலாது. இனி எதிர்காலத்திலும் இந்த உதவி தொடரும் என நம்பிக்கை வைக்கிறோம் என்று கூறினார்.