புதுடெல்லி : உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில், உலகின் 700 கோடியாவது குழந்தை இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ அருகில் உள்ள கிராமம் அல்லது டெல்லி அருகே உள்ள சன்ஹாடியா பிறக்கும் என ஐ.நா. மக்கள் தொகை நிதியம் கணக்கிட்டுள்ளது.
மத்திய சுகாதரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘‘இந்நிகழ்ச்சி கொண்டாடப்பட்டாலும், இந்தியாவை பொறுத்தவரை இது கவலையளிக்க கூடிய விஷயம். உலக நிலப்பரப்பில் 2.4 சதவீதம் மட்டுமே கொண்ட இந்தியாவில், உலகின் 18 சதவீத மக்கள் இருக்கிறோம். தம்பதிகள் இரு குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அதிக பாதிப்பு இருக்காது’’ என்றார். இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 121 கோடியாக உள்ளது. 2030ம் ஆண்டில் இந்தியா சீனாவை மிஞ்சும் எனத் தெரிகிறது.