
பள்ளிகளே Schools,நடைபெறாதபோது கல்விக் கட்டணம் வசூலிக்கலாமா? நீங்கள் ஆசிரியர்களுக்கு Teachers சம்பளம்aleryகொடுக்க வேண்டுமென்றால் அதற்கு லாக் டௌனாலும் Lockdownகொரோனாவிடமும் சிக்கி வாழ வழி தெரியாமல் தவிக்கும் அப்பாவி மக்கள்தான் சிக்கினார்களா?
கட்டட நிதி வாங்குவீர்கள் கம்பியூட்டர் கட்டணம் பெறுவீர்கள் விளையாட்டுக்கு கட்டணம் வாங்குவீர்கள் ஆய்வுக்கூட நிதி வசூலிப்பீர்கள் அட்மிசன் பீஸ் கட்ட வேண்டும் பஸ் கட்டணம் செலுத்த வேண்டும் யூனிபார்ம் கட்டணம் செலுத்த வேண்டும் இப்போதுதான் எதுவுமே நடைபெறவில்லையே அப்புறம் எதற்கு கட்டணம் கேட்கிறீர்கள் பெற்றோர்களிடம் ..?.
நஷ்டம் வந்தபோதும் பல நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தார்கள் ... சில வீட்டு உரிமையாளர்கள் வாடகையின்றி மக்களை குடி வைத்தார்கள் ஆனால் மழலைக் குழந்தைகளுக்கும் நம் எதிர்கால தலைமுறைக்கும் அவரவர்கள் வீட்டிலிருந்தே போன் மூலம் சொல்லிக் கொடுக்க எதற்கு லட்சக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும்...?
இது போன்ற ஓப்பன் ஸ்கூலிங் முறைக்கு அரசும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் கூட மிக மிக குறைவான கட்டணத்தையே வசூலிக்கின்றன. அட்டை பூச்சி போல மக்களின் பணத்தை உறிஞ்சிக் குடிக்க காத்திருக்கும் பல்வேறு நிறுவனங்களிடம் ஏமாந்து போகாமல் இந்த லாக் டவுன் காலத்திலாவது மக்களை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்.
வாழ்வா சாவா? கொரோனாவிடம் என்று இருக்கும் லட்சக்கணக்கான மக்களிடம், அடுத்த மாதம் வேலை நிலைக்குமா அல்லது சம்பளம்தான் தருவார்களா என்று இருக்கும் மக்களிடம், தொடந்து வரும் காலங்களில் இந்தப் பேரிடர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை எப்படி சமாளிப்பது என விழி பிதுங்கி இருக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பணத்தை அவர்களின் எதிர்காலத்திற்க்கு சாப்பாட்டிற்காக வைத்திருக்கும் கொஞ்சம் சேமிப்பையும் கல்விக் கட்டணம் என்ற பெயரில் பிடுங்க அனுமதிக்கலாமா?
கொரோனவினால் போகும் உயிர்களை பாதுகாக்கும் அதே நேரத்தில் வேலை இழப்பினாலும் மன அழுத்தத்தினாலும் சமூக அழுத்தங்களினாலும் போகும் உயிர்களையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்
வட மாநிலங்களில் லூதியனா, ஹரியானா,ஒரிசா போன்ற இடங்களில் கல்விக் கட்டணம் Educational Feesவசூலிப்பதை எதிர்த்து பல்வேறு இடங்களின் மக்கள் சமூக இடைவெளியுடன் போராடுவதை படங்களுடன் இந்த வீடியோவில் பதிவிட்டு இருக்கிறோம்.
அன்பு மக்களே! எங்களின் இந்த முயற்சிக்கு உறுதுணையாய் நின்று போராட அனைவரையும் அழைக்கிறோம். தங்களால் இயன்ற முறையில் சமூக பிரட்சனைகளுக்கு குரல் கொடுங்கள். தேசம் காப்போம்.
வயிறு காயும் ஏழைக் குழந்தைகளுக்கு அநீதி இழைக்கப் படுவதை கண்டித்திருக்கிறோம். பேரிடரில் போராடும் மக்களின் Peoples பணம் Money காக்கப் படுவதை வலியுறுத்துகிறோம். சோகத்தில் இருக்கும் மக்களின் பிரட்சனைகளை தீர்க்க வேண்டிய இடத்தில் மக்களுக்கு வேலியாய், கண்களாய் இருக்கும் அரசியலின் அமைப்புகளின், அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல முற்படுகிறோம்.
முடிந்தவர்கள் இந்த வீடியோக்களை ஷேர் செய்யங்கள். இந்த கருத்துக்கள் சரி என நினைப்பவர்கள் லைக் செய்யுங்கள். தொடந்து எங்களுக்கு ஆதரவு தருபவர்கள் சப்ஸகிரைப் (Subscribe ) செய்யுங்கள்
.
வாழ்க தமிழ்நாடு! வளர்க இந்தியா! (India)
-ஜெயசெல்வன்