-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

செட்டிநாடு எலும்பு குழம்பு Chettinad Bone Gravy

அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சமையல் தான் செட்டிநாடு. அதிலும் செட்டிநாடு அசைவ சமையல் Non Veg மிகவும் சுவையாக இருக்கும். இங்கு அதில் ஒன்றான செட்டிநாடு எலும்பு குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வார
விடுமுறையில் செட்டிநாடு எலும்பு குழம்பை செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



தேவையான பொருட்கள்: 

மட்டனுக்கு... மட்டன் எலும்பு - 1/2 கிலோ 
இஞ்சி பூண்டு பேஸ்ட் Paste - 1 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
உப்பு Salt - தேவையான அளவு 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
தண்ணீர் Water - 1 கப் குழம்பிற்கு... 
வெங்காயம் Onion - 2 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் Green Chilli - 3 (நீளமாக கீறியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
மஞ்சள் தூள் - 1 
டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்ழுன் 
தேங்காய் - 1/2 கப் (துருவியது) 
தக்காளி - 3 (நறுக்கியது) 
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது) 
முருங்கைக்காய் - 1 (நறுக்கியது) 
தண்ணீர் - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது தாளிப்பதற்கு... 
எண்ணெய் Oil- 1/4 கப் 
பட்டை - 3 இன்ச் 
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
ஏலக்காய் - 5 
கிராம்பு - 5 
பிரியாணி இலை Briyani Leaves - 1 
கறிவேப்பிலை - சிறிது



செய்முறை: முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு, மட்டனுக்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து, 15 நிமிடம் மீண்டும் வேக வைத்து, பின் அடுப்பில் இருந்து குக்கரை இறக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் தேங்காயைப் போட்டு பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் மற்றும் குக்கரில் உள்ள மட்டனை அப்படியே நீருடன் ஊற்றி, அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டையும் சேர்த்து கிளறி, 25-30 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, கொத்தமல்லித் தூவி இறக்கினால் செட்டிநாடு எலும்பு குழம்பு ரெடி!!!

DO You Need Web Site?