ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்வது எப்படி?

நீங்க ஏதாவது தேவைக்காக லோன் loan வேண்டி விண்ணப்பிக்கும்போது ஏறத்தாழ எல்லா வங்கிகளுமே உங்களுடைய சிபில் ஸ்கோர் அதாவது கடன் பெறும் திறனைப் பற்றி உங்களுக்குக் கடனைத் தருவதற்கு முன் விசாரிக்கும். உங்களுடைய ஸ்கோர் அல்லது புள்ளிகள்
Points இதில் குறைவாக இருந்தால் நீங்க இதுக்கு முன்னாடி வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் இருந்துள்ளதை என்பதைக் காட்டும். அதனால் உங்களுக்கு லோன் கிடைக்கிறது சிரமம் தான் அல்லது கிடைக்காமல் கூடப் போகலாம்

கடனை திருப்பிச் செலுத்தாததைத் தவிரச் செலுத்துவதில் தாமதம் கடனை முன்கூடியே அடைத்துவிடுதல் போன்ற பல காரணங்கள் உங்கள் சிபில் ஸ்கோர் Score குறைவாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். உண்மையில், 750-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றிருந்தால் உங்களுக்கு லோன் கிடைக்க 79 சதவிகித வாய்ப்புகள் உண்டு. எனவே ஒரு கடன் வாங்குவதற்கு முன் ஒரு முறை உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். எப்படித் தெரிந்துகொள்வது? அண்மையில், ஒருவர் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடனைப் பெற முயற்சித்த போது வங்கிப் பிரதிநிதி அந்த வாடிக்கையாளரின் சிபில் புள்ளிகளை ஆன்லைன் Online  மூலமாக அறிந்து அவருக்குத் தெரிவிக்கவும் அவருடைய கடன் விண்ணப்பத்தை அனுமதியை அளிக்கவும் முடிந்தது. ஆனால் இது எப்போதுமே சாத்தியமாகாது. ஏனென்றால் இது சரியான நடைமுறை அல்ல. நீங்கள் உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இது இலவச சேவை இல்லை - நீங்கள் 500 ரூபாயை இதற்காகக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை தொடர்பு கொள்ளலாம் : https://www.cibil.com/online/credit-score-check.do  இந்த இணையதளம் உங்களுடைய பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள் மற்றும் தொலைபெசி எண்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கேட்கும்.. அவற்றைக் கொடுத்துப் பின்னர்க் கட்டணத்தைச் செலுத்தலாம். அதன் பிறகு உங்கள் சிபில் தொடர்பான விவரங்கள் உங்கள் இ-மெயில் E mail முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். இது பொதுவாக வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி விரைவாகக் கிடைத்துவிடும் நீங்கள் ஒரு வீட்டுக்கடனுக்காக விண்ணப்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதற்கான  Documents ஆவணங்களைத் தயார் செய்வதிலிருந்து அதற்குண்டான விதிமுறைகளுக்கு உங்களைத் தயார் செய்வது வரை நீங்கள் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். ஒருவேளை நீங்கள் உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள முயலவில்லையென்றால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இதற்காக நீங்கள் உழைத்த உழைப்பு வீணாகலாம். எனவே உங்கள் சிபில் ஸ்கோரை முதலில் தெரிந்து கொள்வது சிறந்ததாக இருக்கும். ஒருவேளை உங்கள் ஸ்கோர் குறைவாக இருக்குமானால் உங்களுக்கு லோன் கிடைக்காது என்பதை இன்னொரு முறை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இல்லையென்றால், நீங்கள் ஒரு அதிகம் வட்டி விதிக்கும் ஒரு கடனையோ அல்லது உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து கடனையோ பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சில நிறுவனங்களும் நபர்களும் கடன் தொகை பெரியதாக இருந்தால் பயந்து ஒதுன்கிவிடக்கூடும். முடிவாக... ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் உங்கள் சிபில் ஸ்கோரை கடன் வாங்குவதற்கு முன்பாகவே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒன்றும் அவ்வளவு சிக்கலான விஷயமல்ல. சில நிமிடங்களைச் செலவழித்தால் போதுமானது. பின்னர் வரும் சிக்கல்களைச் சமாளிக்க இது உதவியாக இருக்கும்.

 For Your Home Loan & Business Loan Consulting : 09578751335
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search