-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

வீட்டுக் கடன் விபரங்கள் (Housing Loan Details)

சென்னை(Chennai): வீடு(House) வாங்க வேண்டும் என்பது இன்றளவும் பலரின் கனவாகவே(Dream) உள்ளது. குறைந்த வருமானத்தில் உள்ளவர்கள் முதல் அதிக வருமானத்தில் உள்ளவர் வரை அனைவருக்கும் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இதற்காக கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து
வாங்கியது எல்லாம் அந்தகாலம், இந்தகாலத்தில் சம்பாதிப்பது(Earning) அன்றாட வாழ்க்கைக்கே செலவாகும் நிலையில் வீடு வாங்க(House Purchase) அனைவருக்கும் உதவும் ஒரே விஷயம் லோன்(Loan) அதவாது கடன். வீட்டு லோன்(Home Loan) வாங்காமல் நாம் விரும்பிய வீட்டை யாராலும் வாங்க முடியாது என்ற நிலை தற்பொழுது எல்லோருடைய விட்டிலும் உள்ளது. கனவு இல்லத்தை நினைவில் கொண்டு வர பல வங்கிகள்(Banks) உதவுகின்றன. இதற்கென வங்கிகள் சிறப்பாக செயல்ப்பட்டு வருகின்றது. வங்கி கடன் பெருவதற்கு முன் அதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

 வங்கி கடன் (Bank Loan)

வீட்டுக் கடன் பற்றி எதையும் உணராமல் தெரிந்து கொள்ளாமல் அப்படியே வங்கிகளில் சென்று கடன் கேட்டால் நஷ்டம் உங்களுக்குதான். எதற்கு பணம் கட்ட வேண்டும், எதற்கு கட்ட வேண்டாம் என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதை பற்றி இங்கு காண்போம்.

 மதிப்பீட்டு கட்டணம் (Valuation Charge )


லோன் கேட்டவுடன் வழங்கப்படுவதில்லை. அதிகாரிகள் நீங்கள் லோன் கோரும் சொத்தையும் கேட்ட தொகையையும் மதிப்பீடு செய்த பின்னரே வழங்குவர். இதற்கென உள்ள பொறியாளர்கள் சரி பார்த்து சொல்வதை கடமையாக கொண்டுள்ளனர். இதற்கான செலவை லோன் கேட்பரிடமிருந்து வசுலிக்கப்படும். இதவே மதீப்பீட்டு கட்டணம்.

பத்திர கட்டணம் (Document Charge)

லோன் கேட்கும் நேரத்தில் பல வித பத்திரங்களை சரிபார்க்க நேரிடும். இதற்கான பத்திரங்களை சரிபார்க்கவும் டாகுமெண்ட் செய்யவும் வங்கிகள் தனியாக கட்டணம்(Charge) வசுலிக்கப்படும். ஆகையால் அலுவலகத்தில் பத்திரங்களை ஒப்படைக்கும் முன் பல மாதிரிகளை(Copies) எடுத்து வைப்பது நல்லது.

அதிக வட்டியிலிருந்து(Interest) குறைந்த வட்டிக்கு செல்ல (Balance Transfer)

சிலர் லோன் வாங்கிய வங்கியை விட மற்ற வங்கிகள் குறைந்த அளவில் வட்டி வாங்குவதை உணர்ந்து புதிய வங்கிக்கு லோனை மாற்ற ஏற்பாடு செய்யக்கூடும். இதனால் வங்கிக்கி சங்கடம் ஏற்படும். இதை தடுக்க அதிக கட்டணத்திலிருந்து குறைந்த கட்டணத்திற்கு வாடிக்கையாளார்கள் (Clients) மாறுவதற்கு வங்கி வழி செய்கின்றது. இதற்கென முன்னரே கட்டணம் வசுலிக்கப்படும்.

ஸ்டாம்ப் பேப்பர் செலவுகள்
(Stamp Duty)

ஸ்டாம்ப் செலவுகள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதை நிர்ணயம் செய்ய தனி கவனம் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. கட்டிதத்தின்(Building) தன்மையை பொருத்தே இதை நிர்ணயம் செய்கின்றனர்.

இதர கட்டணம் (Other Charges)

வீட்டு கடன் பலவித வேலைகளை உள்ளடக்கியது. அதாவது, கடனுக்கான காரணம் அல்லது செயலாக்க கட்டணம்(Processing Charge), நிர்வாக கட்டணங்கள்(Admin Charge), ஆவணங்கள், தாமதமாக பணம் செலுத்துவது, வட்டியில் மாற்றம், கடன் மறுசீரமைப்பு, வட்டி விகிதம், சட்ட கட்டணம், தொழில்நுட்ப ஆய்வு கட்டணம், வருடாந்திர சேவைக் கட்டணம் என்று நீண்டு கொண்டே போகும்.


எதுவாக இருந்தாலும் லோன் வாங்கும் முன் கவனமாக இருப்பது நல்லது. தவிர்க்க முடியாத கட்டணங்களாக ஸ்டாம்ப் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் பார்க்கப்படுகிறது. மேலும் அரசு துறை(Government) வங்கிகளில் கடன் பெறுவது மூலம் குறைவான வட்டியில் கடன் பெற வாய்ப்புண்டு.


For Housing Loan: 9677464889




DO You Need Web Site?