ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

மார்பக புற்றுநோயைத் தடுக்க

உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அண்மைக் காலமாக மார்பக புற்றுநோயால் Cancer பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இந்தியாவில் India சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பெண்கள்  மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள் என்றும் மருத்துவர்கள் Doctor's அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது. சரியான உணவுப் பழக்கத்தின் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்றாடம் உண்ணும் உணவுகளிலேயே மார்பகப் புற்றுநோயை தடுக்கும் மருந்துப் பொருட்கள் Medicines காணப்படுகின்றன. அவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்கள் பரிந்துரைந்த உணவுகளின் Foods பட்டியல் உங்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது.

பாகற்காய்

பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் மார்பகப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே என்பவர் மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்று கூறியுள்ளார். மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

மாதுளம் பழம்

ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆலிவ் எண்ணெய் Olive Oil

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய் தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

வைட்டமின் டி உணவுகள்

மார்பகப் புற்றுநோயை குணப்படுத்த வைட்டமின் டி சத்து கொண்ட உணவுகளை உண்ணவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பால் Milk, முட்டை Egg போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். அதேபோல் வெள்ளைப் பூண்டு, புருக்கோலி, திராட்சைப் பழம், கிரீன் டீ போன்றவைகளை தினசரி உட்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்கவேண்டும். அதேபோல் அதிக காரம் நிறைந்த உணவுகளை உண்ணக்கூடாது என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search