ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

இரானின் அணுத் திட்டம் தொடர்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் விவாதிக்கின்றனர்

அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெதென்யாஹுவை வெள்ளை மாளிகையில் வைத்து சந்திக்கிறார். இரானின் சர்ச்சைக்குரிய அணுத் திட்டம் தொடர்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கொண்டுள்ள கவலைகள் தொடர்பில் இருவரும்
விவாதிக்கின்றனர்.

இரான் அணுஆயுதங்களை உருவாக்க முயல்வதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம்சாட்டுகின்றன.

ஆனால் அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி இருநாடுகள் இடையில் கருத்து வேற்றுமை நிலவுகிறது.

காலம் கடந்துகொண்டு போகிறது, இரானின் அணுசக்திக் கூடங்கள் எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால் அவசரப்பட்டு இராணுவ நடவடிக்கை என்ற விஷயத்துக்கு செல்லக்கூடாது, இரான் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் எடுக்கப்பட்டுவரும் புதிய ராஜீய முயற்சிகள் பலன் அளிப்பதற்கு சற்று கால அவகாசம் வழங்க வேண்டும் என ஒபாமா தெரிவித்துள்ளார்.
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search