ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி

உலகில் சமீபகாலமாக நடைபெறும் சில நிகழ்ச்சிகள் நம்மை பெரிய ஆச்சரியத்தில் ஆழத்துகின்றன. இது போன்ற சம்பவம் சீனாவில் பீஜிங் நகர் அருகேயுள்ள லியூ லோயு என்ற கிராமத்தில் நடந்தது.

இந்த ஊரைச் சேர்ந்த லி ஷியுபெங் என்ற 95 வயது மூதாட்டி தனி வீட்டில் வசித்து வருகிறார். அவரது பேத்து அவ்வப்போது வந்து உணவு வழங்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் காயம் காரணமாக படுத்த படுக்கையாக கிடந்த அவருக்கு உணவு எடுத்துக் கொண்டு பேத்தி பார்க்க வந்தார். ஆனால் பாட்டி அசையாமல் மூச்சுபேச்சு இன்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தட்டி எழுப்பிய போது அவர் அசையவில்லை. மூச்சு விடவில்லை. ஆனால் உடல் மட்டும் சற்று வெதுவெதுப்பாக இருந்தது.


இதனால் மூதாட்டி இறந்து விட்டதாக முடிவுக்கு வந்த மகன் இறுதி சடங்குகள் ஏற்பாடு செய்து சவப்பெட்டியில் மூதாட்டியின் உடலை வைத்தனர்.

மேலும் அங்குள்ள கிராமங்களில் வயதானவர் மரணம் அடைந்தால் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சில நாட்கள் உடலை வைத்திருப்பது பாரம்பரிய வழக்கமாகும்.

இறுதி சடங்கு செய்வதற்கு முந்தைய நாளில் சவப்பெட்டி காலியாக இருந்தது. மூதாட்டியின் பிணத்தைக் காணவில்லை. இதனால் திகைப்படைந்த உறவினர்கள், அவரை வலைவீசி தேடிய போது, சமையல் அறையில் ஒரு இருக்கையில் மூதாட்டி உட்கார்ந்து உணவு தயாரிப்பது தெரியவந்தது.

பின்பு உறவினர்களிடம் அவர் கூறுகையில், ”நான் வெகுநேரமாக தூங்கி விட்டேன். இதனால் எழுந்தவுடன் ரெம்ப பசி எடுத்தது. ஏதாவது சமைத்து சாப்பிட விரும்புகிறேன்” என்றார்.

இதுக் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இந்த மூதாட்டிக்கு செயற்கை மரணம் ஏற்பட்டிருக்கிறது. அப்படி நேரும் போது மூச்சு இருக்காது. ஆனால் உடலில் உஷ்ணநிலை வழக்கம் போல இருக்கும்.

உணர்வு திரும்பியதும் எழுந்து விடுவார்கள். சம்பிரதாய முறைப்படி பல நாட்களுக்கு உடலை வைத்திருந்ததால் அவர் உயிர் தப்பி விட்டார்” என்று தெரிவித்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search