ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

அயிரை மீன் குழம்பு

மீன் குழம்பு என்றாலே நினைக்கும் போதே நாவில் நீர் ஊறும். அதுவும் கிராமப் பகுதிகளில் கிடைக்கும் அயிரை மீன்களில் வைக்கப்படும் குழம்பின் ருசியே அலாதிதான். நகரங்களில் ஒரு சில உணவகங்களில் மட்டும் அயிரை மீன் குழம்பு ஸ்பெசல் அயிட்டமாக தயார்
செய்யப்படுகிறது.

மிகவும் சிறியதாக இருக்கும் அயிரை மீன் உயிருடன்தான் விற்பனை செய்யப்படும். இதனை சுத்தம் செய்வதே அலாதியானது. குழியான பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு ஊறவைத்து அலசினாலே அதில் இறந்துவிடும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கவிழ்த்து வைத்தால் மீன்கள் உண்ட கசடுகள் எல்லாம் வெளியேறிவிடும். பின்னர் குழம்பு வைக்கலாம்.

தேவையான பொருட்கள்

அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு,வெந்தையம் – தாளிக்க சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் தேவையெனில் அரை மூடி

அயிரை மீன் குழம்பு செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.

நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.

மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அயிரை மீன் குழம்பு தயார்.

ஒரு சிலர் சுவைக்காக தேங்காய் சேர்ப்பது வழக்கம். தேங்காரை அரைத்து மசாலா கொதி வரும்போதே ஊற்றவும். நன்றாக கொதித்து நுரை போன பின் அயிரை மீனை போட்டு இறக்கிவிடவும். அந்த சூட்டிலேயே மீன் வெந்துவிடவும். அப்படியே அள்ளி சாப்பிலாம். அத்தனை ருசி நிறைந்தது அயிரை மீன்.
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search