-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

முகச் சுருக்கம் வராமல் தடுக்க / போக்க ஆலோசனைகள்

இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். வறட்சியான தேகம், எண்ணெயில் பொரித்த உணவுகள். பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவைகள் இளமையிலேயே முகச்சுருக்கத்தை ஏற்படுத்திவிடும். அதேபோல்
தேவையற்ற விசயங்களுக்கு கவலைப்படுவதும் முகச்சுருக்கம் ஏற்பட காரணமாகிறது. எனவே முகச்சுருக்கத்தைப் போக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்.

காய்ச்சி ஆறவைத்த பால் உடன் இரண்டு டீஸ்பூன் அதனுடன் நான்கு துளி எலுமிச்சை சாறு கலந்து இரவு படுக்கும் முன்பு முகத்தில் சுருக்கம் உள்ள இடங்களில் பூசவும். காலை எழுந்த உடன் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சோப் போடக்கூடாது. இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்து வர சுருக்கம் போகும்.

கேரட் சாறு, தேன்

ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து கழுத்திலும் முகத்திலும் தேய்க்கவும். 20 நிமிடத்திற்குப்பிறகு ஒரு பிஞ்ச் சோடா பை கார்பனேட் கலந்த சுடுநீரில் பஞ்சை முக்கி துடைத்தால் எப்படிப்பட்ட சுருக்கங்களும் மாயமாகி விடும்.

பப்பாளி, பாதம் எண்ணெய்

பப்பாளிப்பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும் பழுத்த பப்பாளியை நன்கு கூழாக்கி அதனை முகத்தில் தேய்ப்பது நல்ல பலன் தரும். பப்பாளி சதையை சாப்பிட்ட பின் அதன் தோலின் உட்பகுதியில் உள்ள பகுதியை தேய்த்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு படுக்கைக்குப் போகும் முன்பு பாதம் எண்ணெயை நன்றாக முகத்தில் தேய்த்து உறங்கவும். பின்னர் காலையில் எழுந்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ சுருக்கம் போயே போச்சு.

வைட்டமின் ஈ

முகச்சுருக்கத்தை நீக்குவதில் ஈ வைட்டமினுக்கு முக்கிய பங்கு உண்டு. வைட்டமின் மாத்திரையை உடைத்து, அதனுடன் கிளிசரின் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். முகச்சுருக்கம் நீங்கும். நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

ஆரஞ்ச் ஜூஸ்

முகச் சுருக்கம் வராமல் தடுக்க வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும். துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தண்ணீர் குடிங்க

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும். அது முகச்சுருக்கத்தை நீக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக பெண்கள் தினமும் குறைந்தது 1 1/2 லிட்டர் தண்ணீர் பருகவேண்டுமாம் இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

DO You Need Web Site?