-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

டைட்டானிக் கப்பல் மூழ்கி 100வது ஆண்டு: பொருட்களை ஏலம் விட முடிவு (வீடியோ, படங்கள் இணைப்பு)

கடலில் மூழ்கி விபத்திற்குள்ளான உலகின் பிரபலமான பயணிகள் கப்பலான டைட்டானிக் கப்பலில் எஞ்சிய சேதமடைந்த பாகங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதி பொது ஏலம் விடப்படவுள்ளது.

இதில் ஹேர்ப்பின் முதல் சமையலுக்கு பயன்படுத்திய பாத்திரம் வரை கடலில்
மீட்டு எடுக்கப்பட்ட 5000 வகையான பொருட்கள் ஏலத்திற்கு வருகின்றன.


கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகப்புகழ்பெற்ற டைட்டானிக் பயணிகள் கப்பல், அமெரி்க்காவின் வட அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது பனிப்பாறையில் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த கப்பலில் பயணித்த 2228 பேர்களில் 1800-க்கும் மேற்பட்டோர் கடலில் முழ்கி பலியாயினர். கடலில் முழகி விபத்திற்குள்ளான டைட்டானிக் கப்பல் கடந்த 1984-ம் ஆண்டு கனடாவின் நியூபவுண்ட் லேண்ட் கடல் பகுதியில் 4 கி.மீ ஆழத்தில் முழ்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் தனியார் நிறுவனம் ஒன்று 1987, 1993, 1994, 1996, 1998, 2000 , 2004 ஆகிய ஆண்டுகளில் கப்பலில் எஞ்சிய பொருட்களை சேகரித்து வந்தது. 

இந்நிலையில் டைட்டானிக் கப்பல் முழ்கியதன் 100-ம் ஆண்டு தினத்தையொட்டி, நியூயார்க்கைச் சேர்ந்த கர்ன்‌ஷே என்ற ஏல நிறுவனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதி ஏலம் விட முடிவு செய்துள்ளது. 

இந்த ஏலத்தில் ஹேர்ப்பின் முதல் பெரிய பொருட்கள் என 5000 வகையான பொருட்களை ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DO You Need Web Site?