-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

திணித்தால் வராது திறமை

ஒரு ஊரில் பிரசங்கவாதி ஒருவர் இருந்தார். அவர் ஊர் ஊராக சென்று நல்ல கருத்துக்களை தனது பிரசங்கத்தின் மூலம் தெரிவித்து வந்தார். அப்படிதான் அவர் ஒருநாள் ஒரு மலைக் கிராமத்துக்குச் சென்றார். அங்கு ஆடு, மாடுகள் மேய்ப்பவர்களே அதிகம். மாலை வேளையில்
தான் அங்கு அவர்களுக்கேல்லாம் பிரசங்கம் செய்யப் போவதாகவும் அவர்கள் அனைவரையும் அங்கு வருமாறும் கூறினார்.

பல நல்ல விஷயங்களை அவர்களிடம் சொல்வதற்கு யோசித்து வைத்திருந்தார். அதோடு இன்று தனது ஓரே பிரசங்கத்தின் மூலம் அவர்கள் அனைவரையும் சிறந்த அறிவாளிகளாக மாற்றிவிட வேண்டும் என்பது அவரின் திட்டமாகவும் இருந்தது. ஆனால் மாலையில் அந்த இடத்தில் ஓரே ஒரு இளைஞனை தவிர வேறு யாரும் வந்திரக்கவில்லை. பிரங்கவாதிக்கு பெரும் அதிர்ச்சியாய் போய்விட்டது. என்ன செய்வ என்றே தெரியாமல் அவ் இளைஞனிடம் "உனக்காக மட்டும் என்னால் பிரசங்கம் செய்யமுடியாது நீ போகலாம்" என்றார்.

இதைக்கேட்ட அவன் "ஐயா நான் இங்கு மாடுகளுக்கு தீனி போடுவதற்காக வருவேன், சில நாட்கள் ஒரிரண்டு மாடுகள்தான் இருக்கும் எல்லா மாடுகளும் இருப்பதில்லை அதற்காக எல்லா மாடுகளும் இல்லை என்று நான் தீனி போடாமல் போவதில்லை" என்றான். பிரசங்கவாதி அவன் சொன்ன அர்த்தத்தை புரிந்து கொண்டு உற்சாகத்துடன் தனது பிரசங்கத்தை தொடங்கினார்.

தன் போதனைகளை அவ் இளைஞனுக்கு இரண்டு மணி நேரமாக சொல்லி முடித்தார். நல்ல பல போதனைகளை தந்து ஒரு ஆடு மாடு மேய்ப்பவனை அறிவால் நிரப்பிவிட்டோம் என்று
பெறுமிதம் கொண்டார். அத்தோடு அவனைப் பார்த்து "எப்படி இருந்தது?" என்று கேட்டார்.

அதற்கு அவனோ "ஐயா ஒரு விடயம், தீனியை ஒரு மாடு இருந்தாலும் அதற்கு போட்டுத்தான் போவேன் என்று சொன்னேன், ஆனால் அந்த ஒரு மாட்டுக்கே நான் கொண்டுவந்த தீனி எல்லாவற்றையும் போட்டு அதன் வாயில் திணிக்க மாட்டேன்!" என்றான். இதை கேட்ட பிரசங்கவாதி தன் தவறை உணர்ந்துக்கொண்டார்.

DO You Need Web Site?