-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

கவரிங் நகையை பராமரிப்பது எப்படி?

தங்கம் விலை நாளாந்தம் ஏறிக்கொண்டிருப்பதால் நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்க நகை எட்டாக்கனியாகி வருகிறது. இந் நிலையில் கவரிங் நகைகள் சந்தையில் கனிசமான இடத்தை பிடிக்கத்தொடங்கியுள்ளன.






ஆடைக்கு ஏற்ற நிறங்களில் கற்கள் வைத்தும், எனாமல் எனப்படும் நிறச் சேர்ப்பு செய்தும் கவரிங் நகைகள் வருவதால் பெண்களிடையே இதுபோன்ற நகைகளுக்கு அதிக மவுசு உண்டு.

வாங்கிய கவரிங் நகை சில நாட்களில் கறுக்கத் தொடங்கிவிடும். இதனை வாங்கிய கடையில் கொடுக்கவும் முடியாது, நாம் அணிந்து கொள்ளவும் முடியாது. இப்படி வீணாகிப் போவதைத் தடுக்க ஒரு நல்ல வழி உள்ளது.

புதிதாக கவரிங் நகை வாங்கியவுடன் அதன் மீது நெயில் கலர் நெயில் பாலிஷ் ஒரு கோட்டிங் கொடுக்கவும். அதாவது நிறமில்லாத நெயில்பாலிஷ் வாங்கி அதனை உங்கள் நகை மீது தடவி வைக்கவும்.


இப்படி செய்வதால் நகை தண்ணீரில் பட்டு வெளுத்துப் போவது தவிர்க்கப்படும். எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும். பொதுவாக தங்க நகைகளை விட கவரிங் நகைகளை பத்திரமாக பாதுகாத்தால் அதிக நாட்களுக்கு வைத்திருந்து அணிந்து கொள்ளலாம்.

கவரிங் நகைகளை தங்க நகையுடன் போடாவேக் கூடாது. இது தங்க நகையையும் சேர்த்து பாழாக்கிவிடும். கவரிங் நகையும் கெட்டுப் போகும்.

கவரிங் நகைகளை அணிந்து விட்டு எடுத்து வைக்கும் பொழுது அதனை நன்றாக மெல்லிய காட்டான் துணிவைத்து துடைத்து பாக்ஸில் வைக்கவும்.இப்படி செய்வதால் கவரிங் நகையில் ஊறி இருக்கும் உங்கள் வியர்வை அகற்றப்படும். நகை கருக்காமல் இருக்கும்.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?