-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

ஆபத்தான நிலையில் உலக பொருளாதாரம்

உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோயெலிக் தெரிவித்துள்ளார். உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது, அதற்கு என்னென்ன நடிவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த மாநாடு வாஷிங்டனில் நடந்தது. அதில் உலக வங்கியின் தலைவர்
ராபர்ட் ஜோயெலிக், ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டின் லகார்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பேசிய ஜோயெலிக் கூறியதாவது,

உணவுப் பொருட்களின் விலையேற்றம் இன்னும் பெரிய பிரச்சனையாகத் தான் உள்ளது. ஆனால் தற்போது புதிய பிரச்சனைகள் வரவிருக்கிறது.

வளரும் நாடுகள் விலை உயர்வை சரிசெய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. வளர்ந்த நாடுகள் கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளது.

உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் தான் உள்ளது. அதில் இருந்து மீண்டு வருவது அவ்வளவு சுலபம் அல்ல. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் நிதி நெருக்கடியை சமாளிக்க உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

DO You Need Web Site?