-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

நடனம்:கால்களின் சங்கீதம்!

பாலே நடனம்; தெரிந்த நடனம்… தெரியாத பின்னனி…! சென்னையின் உயர்தட்டு மக்கள் குடியிருக்கும் ஆழ்வார்பேட்டையில் இருக்கிறது ரஷ்யன் கல்சர் செண்டர். இன்றைய ரஷ்யாவும் அதன் சகோதர நாடுகளும் ஒருங்கினைந்த சோவியத் குடியரசு தேசமாக இருந்தபோது, நட்பு நாடான இந்தியவுடன் கலாச்சார
ஊறவுகளை வளர்ப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதுதான் இந்த கலாச்சார தூதரகம்.


இங்கே தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ரஷ்யமொழி கற்கலாம், 3 லட்சம் புத்தகங்கள் கொண்ட நூலகத்தைப் பயன்படுத்தலாம், இங்கேயுள்ள அரங்கில் கலை, இலக்கிய நிகழ்சிகளை நடத்தலாம், ரஷ்யா மற்றும் அதன் நேசநாடுகளின் திரைபட விழாக்களில் உலகப்படங்களை கண்டுகளிக்கலாம். இதனோடு சேர்ந்து நடன வகையின் அற்புதங்களில் ஒன்றான பாலே நடனத்தையும் இங்கே கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக ரஷ்யன் க்ளாசிக்கல் வகை ( Russian classical ballet) பாலே நடனம் கற்பித்தலை கடந்த 30 ஆண்டுகளாக சிறப்பான கலாச்சார பரிவர்த்தனையாக செய்து வருகிறது இந்த மையம்.


தற்போது இங்கே ரஷ்யன் பாலே கற்றுத்தரும் the school of Ballet ans contemrary dance பயிற்சிப் பள்ளியின் இயக்குனராக இருக்கிறார் ஆன் டொனெர் (Ann Tonner). ஏழு வயது சிறுமிகளில் தொடங்கி, 35 வயது திருமதிகள் வரை சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் இங்கே கால்களின் சங்கீதமாய் தவழ்கிறது பாலே நடன பயிற்சி. இங்கே ரஷ்ய பாரம்பரிய பாலே நடனத்தைக் கற்றுக் கொள்ள வயதோ, மொழியோ தடையில்லை. யாரும் மையத்தை அனுகி பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். முழுமையாக பாலே நடனத்தைக் கற்று முடிக்க 7 ஆண்டுகள் ஆகும் என்கிறார் பயிற்சியாளர் ஆன் டோனர். பாலே நடனம்பற்றி தெரிந்துகொண்டால்தானே அதைக் கற்றுக்கொள்வது பற்றி யோசிக்க முடியும்.
ஆசியாவின் பாரம்பரிய நடனங்களில் பல அழியும் நிலையில் இருக்க, பரதநாட்டியம் மட்டும்தான் தனது ஆளுமையைத் தொடர்ந்து செலுத்தி வருகிறது. அதேபோல ஐரோப்பிய பாரம்பரிய நடனங்களில் பாலேவின் தாக்கம் இல்லாத கண்டெம்ரரி நடன வகை இல்லை என்றே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு பாலேவின் அதிக்கம் பரவியிருகிறது. மேற்கத்திய நடனங்களில் உடல்மொழி மீதான அழகியலின் உன்னத வடிவமாக செல்வாக்கு பெற்று விளங்குகிரது. பாலே நடனம் பிறந்து வளர்ந்த கதையைச் சுறுக்கமாக பகிர்ந்து கொள்ளமுடியுமா என்றதும் ஆர்வமாகச் சொல்ல ஆரம்பித்தார் ஆண் டோனர்..


“பாலே என்பது ஒரு பிரெஞ்சு சொல். இதற்கு பாணி அல்லது நடனம் மூலம் கதை சொல்லும் ஒரு மேடைத் தயாரிப்பு என்பது பொருள். அதாவது, பாலே பார்க்கிறோம் என்றால், நடனம் மூலம் கதை சொல்லும் பாணியிலான ஒரு மேடை நிகழ்ச்சியைப் பார்க்கிறோம் என்று பொருள்.

பாலேவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று பிரெஞ்சு பாலே; மற்றொன்று ரஷ்யன் பாலே! இன்று அமெரிக்காவிலும் பாலே வளர்ந்திருகிரது. ஆனால் பாரம்பரிய மரபுகளை உடைத்த நடனமாக, சுதந்திரத்தின் வெளிப்பாடாக அங்கே பாலே இருகிறது. ஆனால்,பாலே நடனத்தின் தாய் இத்தாலி என்றால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு அதாவது பதினைந்தாம் நூற்றாண்டில் இத்தாலிய மன்னர்களின் அரசவையில் ஆண்களும் பெண்களும் நடனமாடி, அரசரையும் அரச குடும்பத்தினரையும் மகிழ்வித்தனர். அந்த நடன முறைதான் பாலே நடனமாக வடிவம் கொண்டது. கொலம்பஸ் காலத்துக்கும் முற்பட்டது இந்த நடன வகை.


ஆரம்பத்தில் கிரேக்க, ரோமானியப் புராணக் கதைகள்தான் பாலே நடனத்தில் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய நடனங்களின் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவிக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாலி நாட்டு இளவரசி கேத்ரின், பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயியை மணந்து, பிரான்ஸுக்கு வந்தாள். அவள் பாலே நடனத்தில் மிகத் திறமைசாலி. அவள் பிரான்ஸுக்கு வரும்போது தன்னோடு பாலே நடனத்தில் சிறந்த நடனக் கலைஞர்கள் பலரையும் அழைத்து வந்தாள். அதன்பின்னர்தான் பிரான்ஸில் பாலே நடனம் பரவத் தொடங்கியது.


ராணி கேத்ரினே ஒரு பாலே நடன நிகழ்ச்சியை வடிவமைத்து, 1581-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி அரங்கேற்றினாள். ‘பாலே காமிக்கே டி லா ரைன்’ என்று பெயர் சூட்டப்பட்ட அதுதான் உலகின் முதல் பாலே நடன நிகழ்ச்சி என்கிறது வரலாறு. அதை இயக்கியவர் இத்தாலிய வம்சாவளியில் வந்த பியூஜாயல் என்பவர். அவர்தான் ‘பாலேயின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.

இன்றும் பாலே நடனத்தின் துவக்கத்தில் நடனமாடுபவர்கள் உடலை வளைத்து, முன்னால் குனிந்து வணங்கி எழுவது, அந்நாளில் ராணி கேத்ரினின் தனது கணவரான மன்னர் 14-ம் லூயியின் முன் நடனக் கலைஞர்கள் வணங்கியதன் தொடர்ச்சியான வழக்கம்தான். 1661-ம் ஆண்டு, பாரிஸ் நகரில் லூயி மன்னரால் பாலே நடனப் பள்ளி ஒன்று துவக்கப்பட்டது. ‘ராயல் டான்ஸ் அகாடமி’ என்கிற அதுதான் முதலாவது பாலே நடனப் பள்ளி.

திரைப்பட யுகம் வந்தபிறகு பாலே நடனம் பின்னர் திரைப்படங்களிலும் இடம்பெற்றது. 'The dumb girl of Portici' என்கிற ஹாலிவுட் படத்தில்தான் பிரபல பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவாவின் ‘ஸ்லீப்பிங் பியூட்டி’ என்ற புகழ்பெற்ற பாலே நடனம் இடம்பெற்றது. நம் நாட்டு உதயசங்கரும் அன்னா பாவ்லோவாவும் இணைந்து நமது பாரம்பரிய நடன அசைவுகளையும் பாலே அசைவுகளையும் கலந்து ‘ராதாகிருஷ்ணா’, ‘இந்தியத் திருமணங்கள்’ போன்ற நடன நாடகங்களை நடத்தியிருக்கிறார்கள்.


இங்கே பிரபலமாக இருக்கும் பரத நாட்டியத்தில் பாதம் முழுக்கப் தரையில் படியும்படி ஆடவேண்டும். ஆனால், பாலே நடனமாடுபவர்களின் பாதங்களைக் கவனித்தால் தெரியும் கட்டைவிரல் மட்டுமே தரையில் பதியும். பாலே நடனத்தின் முழுமையான தேர்ச்சி நிலையை எட்டும்போதுதான் இப்படி பாதத்தின் கட்டை விரலில் மொத்த உடல் எடையையும் தாங்கி ஆடமுடியும். பாலேயின் இந்த இந்த அற்புத டெக்னிக்கை நாங்கள் ‘பாய்ண்டிங்’ என்று சொல்கிறோம். இந்த பாய்ண்டிங் டெக்னிக் வழக்கம் 17-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பாலேயில் நுழைந்திருகிறது.

நாங்கள் இங்கே கற்றுத்தருவது சோதனை முயற்சிகளால் சிதைக்கப்பட்டு விடாத கிளாசிக்கல் பாலே. இதில் மூன்று அம்சங்கள் அதன் சுவாசம் போன்றது. . Classical ballet is defined by three rules : - everything is turned-out - when the feet are not on the floor, they're pointed - when the leg is not bent, it's stretched completely. “ என்று விளக்கம் தந்தவர் “ பாலே கற்றுகொள்வதன்மூலம் உடலை ஒரு பறவையின் இறகைப் போல இலகுவாக ஒரு புள்ளியில் நிறுத்த முடியும்.

பாலேவில் அசைவுகளும், அதில் டூயட்டாக இருவர் மற்றும் இருவருக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து நிகழ்த்தும்போது இந்த நடனமே உடல்மொழியால் கட்டமைக்கப்படும் கவிதையாகி விடுகிறது. பாலேவில் பார் எக்ஸர்சைஸ் எனப்படும் உடல்பயிற்சிகளும் நடனத்தின் ஒரு அங்கம் என்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு உத்திரவாதம் தரும் ஒரு நடனக் கலையாக பாலே இருக்கிறது.

இசைக்கேற்ப தண்ணீருக்கடியில் நீந்தியபடி நடனமாடும் பாலே நடன வகை, அரங்கை விட்டு வெளியே வந்து இயற்கையோடு இணைந்து ஆடும் பாலே, பாராசூட்டை கட்டிக்கொண்டு விமானத்தில் இருந்து குதித்து வான்வெளியில் ஆடும் பாலே என்று மரபை உடைக்கும் பாலேக்கள் இன்று கண்டெம்ரரி பாலேவாக பெருகியிருகின்றன. அவ்வளவு ஏன்?

பாலேவின் பல அசைவுகள் சர்க்கஸ் விளையாட்டுகளிலும், ஒலிம்பிக்ஸ் ‘ஜிம்னாஸ்டிக்ஸ்’ ஆகியவற்றிலும் நிரந்தரமாய் இடம்பிடித்து விட்டது. என்றாலும் இலக்கணப் பிழை இல்லாத ரஷ்யன் பாலேவை நாங்கள் இழக்க முடியாது” என்கிறார் ஆண்டோனர். இந்த கட்டுரையை வாசித்த பிறகு நீங்களும் பாலே கற்க விரும்பினால் நீங்கள் முடிவு செய்ய வேண்டியது ஒன்றுதான். நீங்கள் எந்த வகை பாலேவை கற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்ற தெளிவுதான் அது.

இங்கே நீங்கள் பார்க்கும் பாலே படங்கள் பற்றி…
அமெரிக்காவின் புகழ்பெற்ற கண்டெம்ரரி பாலே நடனகுழுவான மௌண்டைன் டான்ஸர் குழுவைச் சேர்ந்த நடனக்கலைஞர்கள் பரம்பரிய பாலேவின் இலக்கனங்கள் பலவற்றை உடைத்தவர்கள். குறிப்பாக அரங்கை விட்டு பாலேவை இயற்கை வெளிகளில் நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, நடந்து செல்லும் குதிரையின் மீது பாதத்தின் கட்டை விரலை மட்டும் வைத்து ‘பாய்ண்டிங்’ சாதனையை அசாதரணமாக நிகழ்த்தக் கூடியவர்கள். அவர்கள் படைக்கும் பாலே விருந்தைத்தான் புகைப்படங்களில் நீங்கள் பார்க்கிறீர்கள்.


DO You Need Web Site?