டெல்லியிலுள்ள மூன்று வரலாற்றுச் சின்னங்களில் சுற்றுலா பயணிகளை மிக அதிகமாக ஈர்ப்பது குதுப் மினார் என்பது தெரியவந்துள்ளது. குதுப் மினார், செங்கோட்டை, ஹூமாயூன் கல்லறை ஆகிய மூன்றும் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கபட்டவையாகும். டெல்லிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மூன்று இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்றாலும், இம்மூன்றில், குதுப் மினார்தான் சுற்றுலா பயணிகளை மிக அதிகமாக ஈர்க்கின்றது.
12வது நூற்றாண்டில் குத்புதீன் அய்பெக் என்ற அரசரால் கட்டப்பட்ட 234 அடி உயர, இந்தியாவின் மிக உயரமான வரலாற்றுத் தூண் குதுப் மினார். இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தாஜ் மஹாலிற்கு அடுத்த இடத்தில் குதுப் மினார் இருக்கிறது!
2009ஆம் ஆண்டு இதைக் காண வந்த சுற்றுலாவினரிடமிருந்து வசூலிக்கப்பட்ட நுழைவுத் தொகை ரூ.10.41 கோடியாகும்.
தாஜ் மஹாலி்ல் வசூலான தொகை ரூ.14.87 கோடி. ஆக்ராவின் மிகப் புகழ்பெற்ற செங்கோட்டை வசூல் ரூ.9.25 கோடியாகும்.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?