-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

இந்திய பேட்மிட்டன் உலகில் சாய்னா நெஹ்வால்

சாய்னா நெஹ்வாலைப் போல ஒரு பெண், இந்திய பேட்மிட்டன் உலகில் இனி பிறக்க வேண்டும். வந்த வேகத்தில் திரும்பிவிடாமல், நின்று அடித்துக்கொண்டு இருப்பவர்.  ராஜீவ் காந்தி கேல் ரத்னா  விருது பெற்ற முதல் பெண் பேட்மிட்டன் பிளேயர் என்ற அந்தஸ்துக்குச் சொந்தக்காரர். சாய்னா ஒரு போட்டியில் பங்கேற்றால் வெண்கலத்தையாவது வாங்காமல் திரும்பமாட்டார் என்கிற அளவுக்கு அவருடைய ஹிட்-லிஸ்ட் இருக்கிறது. குறைந்த வயதில், விளையாட வந்த சிறிய கால இடைவெளிகளுக்குள் உலகத்தர வரிசையில் முன்னுக்கு வந்தவர். பாலிவுட் பட வாய்ப்புகள்
வந்தபோது, யோசிக்காமல் மறுத்துவிட்டவர், விளம்பரத்துறையில் கால் பதித்துவிட்டார். விளம்பரத்தில் நடிப்பதற்கு கிரிக்கெட் ப்ளேயர்கள், சினிமா நடிகர்கள் வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் சாய்னா கூடுதலாக வாங்குகிறார். இப்படி அதிகப்படியான சம்பளத்தோடு விளம்பரத்தில் நடித்தாலும், தன்னுடைய விளையாட்டில் கோட்டைவிட்டது இல்லை என்பது சாய்னாவின் மிகப் பெரிய ப்ளஸ்!

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?