-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

அதிசய காட்டுச் சிறுவன்

ஐந்து வருடங்களுக்கு மேலாக நகர்ப்புற உலகத்துடன் தொடர்பின்றி காட்டில் வாழ்ந்து வந்த சிறுவன் (17) ஒருவனின் பூர்வீகத்தை கண்டுபிடிக்க ஜேர்மனிய பொலிஸார் ஏனைய நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். Ray என அழைக்கப்படும் குறித்த சிறுவன், தனது தாயார் இறந்த பின்னர்,
தந்தையால் காட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளன. கடந்த ஐந்து வருடங்களாக காடுகளிலேயே வாழ்ந்த இருவரும், வெளி உலக தொடர்பின்றி இருந்துள்ளனர். கூடாரம் அமைத்து தங்கியதுடன், காட்டில் கிடைக்கும் உணவுகளையே வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தந்தையார் காட்டிலேயே இறந்துவிட்டதை தொடர்ந்து, காட்டிலிருந்து வெளியேற நினைத்த குறித்த 'காட்டுச்சிறுவன்' இரண்டு வாரமாக கால்நடையாக பயணம் செய்து பேர்லினை வந்தடைந்துள்ளன.

கடந்த செப்.05ம் திகதி பேர்லின் அவசர தொடர்பு மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளான்.  அவனிடம் காவற்துரையினர் விசாரணை மேற்கொண்ட போது, திசைக்காட்டி கருவின் உதவியுடன் இங்கு வந்ததாகவும், தனது பூர்வீகம் பற்றியும், எங்கு பிறந்து வளர்ந்தேன் என்பது பற்றியும் ஒன்றும் ஞாபகத்தில் இல்லை எனவும் தெரிவித்துள்ளான்.

மருத்துவ பரிசோதனையின் பின் அவனது உடல் நிலையில் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் பேசும் அவன், சிறிது ஜேர்மன் மொழியும் தெரிந்துள்ளான்.

ஐந்து வருடங்களாக காட்டில் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கு  சான்றாக அவனது பழக்கவழக்கங்கள், நடை உடை அனைத்திலும் வித்தியாசத்தை உணர முடிவதாக தெரிவித்துள்ள காவர்துரையினர் இவனது பூர்வீகத்தை கண்டுபிடிக்க ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இண்டர்போல் காவற்துறை மூலம் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?