ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா? நீங்களும் தான் பேட்டி தரலாம்

பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்ன, நீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம். பேட்டி தர விருப்பம் தான் ஆனால் பேட்டிக்கான கேள்விகளை கேட்க யாராவது வேண்டாமா என்று கேட்டால் அதற்கான வழியையும் இந்த தளமே காட்டுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சேவை தான். எளிமையானதும் கூட.

யார் வேண்டுமானாலும் உங்களை பேட்டி காண வழி செய்யும் சேவை என்று பெருமை பட்டு கொள்லும் டைப்காஸ்ட் ஒருவர் தனது ரசிகராலோ நண்பர்களாலோ அல்லது வாசகர்களாலோ பேட்டி காணப்பட வழி செய்கிறது. அதிலும் எப்படி தெரியுமா நேரடி பேட்டிக்கு வழி செய்கிறது.
பேட்டிக்கு நான் தயார் என ஆர்வம் கொள்பவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும். பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் சம்ர்பித்து உறுப்பினரான பின் பேட்டிக்கான பக்கம் அளிக்கப்படுகிறது.
அந்த பக்கத்தில் பேட்டிக்கான தலைப்பு மற்றும் விளக்கத்தை குறிப்பிட்டு பேட்டிக்கு ஆயுத்தமாகலாம். பேட்டி காணப்பட விரும்பும் நேரத்தையும் குறிப்பிடலாம்.(எப்போது வேண்டுமானாலும் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம்).
இதன் பிறகு உங்கள் வலைப்பதிவினிலோ அல்லது பேஸ்புக் பக்கத்துலோ இந்த இணைப்பை சமர்பித்து நண்பர்களையும் வாசகர்களையும் கேள்வி கேட்க அழைக்கலாம். குறிப்பிட்ட நாள் அன்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். கேள்விகளை வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.
வலைபதிவாளர்கள், மாணவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு பயனுள்ள பதிவை எழுதிய பின் அந்த மைய பொருள் தொடர்பாக விவாதிக்க விரும்புகிறவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். பேட்டியை வலைப்பதிவிலும் இடம் பெறச்செய்யலாம்.
அதே போல குறிப்பிட்ட தலைப்பு குறித்து நண்பர்களோடு கருத்துக்களை பகிர இரும்பினாலும் இதனை பயன்படுத்தலாம். மாணவர்கள் ஆசிரியர்களோடு உரையாடவோ அல்லது ஆசிரியர்கள் மாணவர்களோடு உரையாடவோ இதனை பயன்படுத்தலாம்.
கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருக்கும் எவர் வேண்டுமாலும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். வலைப்பதிவுகளும், டிவிட்டர் போன்ற சாதனங்களும் கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பை எல்லோருக்கும் ஏற்படுத்தி தந்துள்ள நிலையில் டைப்கேஸ்ட் சேவை பதிவர்களும் பேஸ்புக் பயனாளிகளும் பேட்டி காணப்படும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
வலைப்பதிவில் பின்னூட்டம் மூலம் அல்லது பேஸ்புக்கில் கருத்துக்கள் மூலம் உரையாடுவதை விட இப்படி பேட்டி வழியே கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சிறந்ததாக இருக்கும். இணையத்தின் ஆற்றலை பயன்படுத்தி கொள்ளும் புதுமையான முயற்சி. ஆனால் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை.

1 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search