ஸ்மார்ட் போன்களில் Smart Phones கொரோனா வைரஸ் Corona Virus எத்தனை நாட்கள் உயிர் வாழும்? என்பது குறித்து ஆய்வொன்றில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.தற்போதைய ஊரடங்கு காலத்தில் ஒவ்வொருவரின் உற்ற துணையாக விளங்குவது ஸ்மார்ட் போன்கள் தான். சமூக வலைதளங்கள், வாட்ஸ் ஆப், படங்கள், சீரியல்கள், பாடல்கள், வீடியோ என அனைத்தும் உள்ளங்கைக்குள் அடங்கி விடுவதால் இளைய தலைமுறையினர் தொடங்கி முதியவர்கள் வரை ஸ்மார்ட் போன்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஏற்றாற்போல நெட்வொர்க் நிறுவனங்களும் டேட்டா கட்டணங்களை Data Charges தற்போது ஆபர் Offer விலையில் வழங்க ஆரம்பித்து இருக்கின்றன. குறிப்பாக பலரும் தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்து இருப்பதால் டேட்டா மக்களின் உயிர்நாடியாகவே மாறிப்போய் இருக்கிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் போன்களில் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிர் வாழும்? என்பது சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 2003-ம் ஆண்டு கண்டறியப்பட்ட சார்ச்-கோவ் வைரஸ் கிளாஸ் மீது 96 மணி நேரம் அதாவது நான்கு நாட்கள் உயிர் வாழும் என கண்டறியப்பட்டது. கிளாஸ் தவிர்த்து கடுமையான பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின் ஸ்டீல் மீது 72 மணி நேரங்கள் உயிர் வாழும் என கண்டறியப்பட்டது. அதே போல தற்போது கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிர் வாழும் என ஆரோக்கியத்திற்கான தேசிய மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்டீல் மற்றும் கடுமையான பிளாஸ்டிக் மீது கொரோனா வைரஸ் 72 மணி நேரம் உயிர் வாழும் என கண்டறியப்பட்டது.
அதேபோல கார்டுபோர்டின் மீது 24 மணி நேரமும் பித்தளை மீது 4 மணி நேரமும் உயிர் வாழும் என கண்டறியப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களும் முன்புறத்தில் கண்ணாடி பேனலுடன் வருவதால், கொரோனா வைரஸ் ஒரு ஸ்மார்ட்போனில் 96 மணிநேரம் வரை கண்ணாடி மீது இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் NIH ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் தவிர, கண்ணாடி மேற்பரப்புகள் கொண்ட, ஸ்மார்ட்வாட்ச், டேப்லெட், லேப்டாப் போன்ற அனைத்து விதமான கேஜெட்டிற்கும் இது பொருந்தும்.
அதனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன், லேப்டாப் ஆகியவற்றை சுத்தம் செய்வது தற்போது மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?