
உலகின் மற்ற நாடுகளில் கொரோனாவை எப்படி தடுப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றன. மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே பாதிப்பை தடுக்க முடியும் என்று உலகமே தவித்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக சீன விஞ்ஞானிகள் புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நம்பிக்கை தரும் செய்தி வெளியிட்டுள்ளது.
நானோ பொருள் அந்த செய்தியில், சீன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை எதிர்த்துப் புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளனர். 96.5-99.9% செயல்திறனுடன் வைரஸை உறிஞ்சி செயலிழக்கச் செய்யக்கூடிய நானோ பொருளைக் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் கூறுவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனா தனது பாரம்பரிய மருந்து மூலம் கொரோனாவை தடுக்க பயன்படுத்தி வரும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.