-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

சீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள்?

கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இருக்காது என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக நாடுகள் பல சந்தேகப்படும் நிலையில், அந்த சந்தேகத்தினை உண்மையாக்கும் வகையில் புள்ளி விபரம் ஒன்று வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது.


நியூயார்க்கில் வசிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த ஜெனிபர் ஜெங் என்பவர் வெளியிட்டிருக்கும் புதிய புள்ளி விபரங்கள் உண்மையிலேயே கதிகலங்கச் செய்கின்றது. இவர் சீனா நாட்டில் செல்போன் சேவைகளை வழங்கி வரும் 3 நிறுவனங்களின் புள்ளி விபரங்களை மேற்கொள்காட்டி சீனாவில் கொரோனா வைரஸிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை சீன அரசு கூறியதை விட பலமடங்கு கூறுதலாக இருக்கும் என்று தெரிவிக்கின்றார்.

சமூக ஊடகத்தில் ஜெனிபர் ஜெங் வெளியிட்டுள்ள தகவல்கள்....
  • 'சைனா மொபைல்' நிறுவனம் மட்டும் கடந்த ஜனவரி மாதம் 8.116மில்லியன் (81 லட்சம்) வாடிக்கையாளர்களை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மொபைல் போன் பயனீட்டாளர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள்? அவர்கள், வேறு மொபைல் சேவை நிறுவனத்துக்கு மாறிவிட்டார்களா? அல்லது மொபைல் போன் எடுத்துச் செல்ல முடியாத உலகத்துக்கு சென்று விட்டார்களா?
  • சீனாவின் மற்றொரு மிகப்பெரிய மொபைல் போன் சேவை நிறுவனமான 'சைனா யூனிகார்ன்', கடந்த ஜனவரியில் 1 மில்லியன்(10லட்சம்) வாடிக்கையாளர்கள் இழந்துள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் எங்கு சென்றார்கள்?
  • 'சைனா டெலிகம்யூனிகேஷன்ஸ்' என்ற மற்றொரு மொபைல் போன் வேசை நிறுவனம் பிப்ரவரியில் 5.6 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
  • இந்த மூன்று மொபைல் சேவை நிறுவனங்களும் ஜனவரி, பிப்பரவரி மாதங்களில் 1.46 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இந்த வடிக்கையாளர்கள் திடீரென மாயமானது எப்படி?. அவர்கள் கொரோனா வைரஸிற்கு பலியாகிவிட்டார்களா? இதுதான் இப்போதைய முக்கிய கேள்வி?
ஆனால், இந்த கெள்விகளுக்கு சீன அரசிடம் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை. கொரோனா வைரஸிற்கு 3,270 மட்டுமே பலியானதாக சீன அரசு தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் அங்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். எனினும் சீனா அரசு அதனை மறைத்து பலியானவர்கள் எண்ணிக்கையை குறைத்து வெளி உலகத்திற்கு காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?