ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

மூன்றாம் உலகப் போருக்கு அழைத்துச் செல்லும் ஏஐ சக்தி


மனித நாகரிகத்தின் அடுத்த படியாக கருதப்படும் செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பமானது எங்கோ இருக்கிறது,  நாம் எங்கோ தூரமாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆனது நமது ஸ்மார்ட்போன்கள் Smart phone வரை
நுழைந்து விட்டதென்பதை உணர வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். பலர் செயற்கை நுண்ணறிவை வரவேற்கையில், அதை வெளிப்படையான முறையில் எதிர்த்து - அது சார்ந்த எச்சரிக்கைகளை வெளியிடும் பல வல்லுநர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

எச்சரிக்கையை விடுக்கும் ஒரு நபர் - ஏன்.?

அண்டவியல் வல்லுனரான ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு அடுத்தபடியாக தொடர்ச்சியான முறையில் ஏஐ (AI)வளர்ச்சிக்கு எதிரான எச்சரிக்கையை விடுக்கும் ஒரு நபர் தான் - எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர். செயற்கை நுண்ணறிவின் அதீத சக்தியானது, மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்குமென அவர் வாதிடுகிறார். ஏன்.?
வளர்த்தெடுக்கப்படும் ஏஐ சக்தி.!

ஏஐ என்று வரும் போது, மனித இனம் மிகவும் ​​கவனமாக திசை திரும்ப வேண்டுமென்று எச்சரிப்பதோடு, இதை கவனத்தில் கொள்ளுமாறு ஏஐ அமைப்புகளை வளர்க்கும் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றார் எலான் மஸ்க்.


மிகவும் ஆபத்தான எதையும் செய்துவிடாத வண்ணம்.!

அவரின் ஒட்டுமொத்த கவலையும், வளர்த்தெடுக்கப்படும் ஏஐ சக்தியானது, மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான எதையும் செய்துவிடாத வண்ணம் உருவாக்கம் பெற வேண்டும், அதில் வல்லுநர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதேயாகும். சக்தி செறிவு நிஜமாகவே ஆபத்து தானா.? ஏஐ எனப்படும் சக்தி செறிவு நிஜமாகவே ஆபத்து தானா.? அல்லது இது எலான் மஸ்க்-கின் ஒரு வியாபார தந்திரமா.? - இல்லை. ஏஜிஐ (AGI) - அதாவது செயற்கை பொது நுண்ணறிவானது ஒரு மிக உயர்ந்த அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றால், அது எந்த விதமான மேற்பார்வையும் இல்லாமல் கூகுள் நிறுவனத்தின்கீழ் இயங்கும் ஒரு சிலரால் கட்டுப்படுத்தப்படும் என்று அர்த்தம்.


முன்கூட்டியே கட்டுப்படுத்த வேண்டும்.!

இந்நிலைப்பாட்டில், சாத்தியமான முறையின் கீழ் பார்த்தால் ஒரு நாகரீக-அச்சுறுத்தலாக (தொழில்நுட்பமாக Technology) கருதப்படும் ஏஐ சக்தியை எதோ ஒருசில நிறுவனங்களின் கைகளை நம்பி நாம் விட்டுவிட முடியாது. அது சரியானதாகவும் இருக்காது. எனவேதான் எலான் மஸ்க், நாம் ஏஐ வளர்ச்சியை முன்கூட்டியே கட்டுப்படுத்த வேண்டும் என்று வாதாடுகிறார். மனிதர்கள் கொல்லப்படும் வரை.? நான் கூறுவதை மக்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கிறன். மக்கள் அதை பற்றி உண்மையில் கவலைப்பட வேண்டுமென நினைக்கிறேன். தெருக்களில் இறங்கிய ரோபோக்களால் மனிதர்கள் கொல்லப்படும் வரை நான் இந்த எச்சரிக்கை மணியை ஒலித்துக்கொண்டே தான் இருப்பேன்.

சாத்தியமே இல்லாத ஒன்றுபோல் தோன்றும்.!

கொலையாளிகளாக ரோபோக்கள் உருமாறும் போது, "அது மிகவும் வினைத்திறன் வாய்ந்ததாக இருக்கும், சாத்தியமே இல்லாத ஒன்றுபோல் தோன்றும். அந்நிலைப்பாட்டில், அந்த தருணத்தில் எப்படி நடந்துகொள்வதென்று மக்களுக்கு தெரியாது" - இதுதான் கடைசியாக, செயற்கை நுண்ணறிவு பிரதிநிதித்துவத்தின் அச்சுறுத்தல்கள் என்கிற தலைப்பின் கீழ் அவர் பேசும் போது கூறிய வார்தைகளாகும்.

பூமியில் ஆதிக்கம் செலுத்தும்.!

ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புதினை பொறுத்தமட்டில், செயற்கை நுண்ணறிவென்பது ஒரு "மகத்தான வாய்ப்பாகும்". மாணவர்களுக்கு அவர் விடுத்த ஒரு அறிக்கையில், "எந்தவொரு நாடு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அதிகப்படியான ஆராய்ச்சிக்கு வழிவகுக்கிறதோ அந்த நாடு தான், பூமியில் ஆதிக்கம் செலுத்தும்" என்று கூறியுள்ளார். புதின் ஒற்றுக்கொள்கிறார் உடன் ஏஐ வளர்ச்சி சார்ந்த வெளிப்படையான ஆபத்துக்களை பற்றியும் புதின் எச்சரிக்கிறார். ஆக செயற்கை நுண்ணறிவான, மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது என்பதோடு சேர்த்து முன்கூட்டியே கணிப்பதற்கான அச்சுறுத்தல்களையும் கொண்டுள்ளதென்பதையும் புதின் ஒற்றுக்கொள்கிறார் என்று பொருள். சாத்தியமான போர்களை உண்டாக்கும் வல்லமை இந்த ஏஐ தொழில்நுட்பமானது, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அனைத்து வகையான தொழில்களையும் செழுமையான முறையில் முன்னெடுக்க உதவும் மறுகையில், சாத்தியமான போர்களை உண்டாக்கும் வல்லமையை கொண்டுள்ளது என்று புதின் எச்சரிக்கிறார்இதைவிட பெரிய எடுத்துக்காட்டு தேவைப்படாது

அறிவியல்-தொழில்நுட்பம் Science  மற்றும் ஆயுத தொழில்நுட்பத்தின் மூலம் உலகின் சக்தி வாய்ந்த நாடாக திகழ விரும்பும் ரஷ்யா கூட, செயற்கை நுண்ணறிவானது நம் பக்கமே திரும்பி, நம்மையும் நம் நாட்டு மக்களையும் அழிக்கலாம் என்ற அடிப்படை அச்சுறுத்தலை கொண்டுள்ளதற்கு இதைவிட பெரிய எடுத்துக்காட்டு தேவைப்படாது.  Third world war மூன்றாம் உலகப் போருக்கு நம்மை அழைத்துச் செல்லும்

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search