-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

கொழுப்பைக் குறைக்கும் கேரட்

இயற்கையாகவே இனிப்புத் தன்மை கொண்ட கேரட்டை  carrot சமைத்து மட்டுமல்ல, பச்சையாகச் சாப்பிடவும் பலரும் விரும்புவர். கேரட்டை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு அது வழங்கும் நற்பலன்கள் ஏராளம்.
கேரட்டை அதிகம் உணவில் food எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லை இருக்காது.

நன்மைகள்:

கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாகச் சாப்பிடும்போது அதில் பெரும்பான்மையான சத்துகள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

கேரட்டில் வைட்டமின் ஏ சத்து vitamin A நிறைந்துள்ளதால், இது ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன், கொழுப்பைக் கரைக்கும் திறன் கொண்டது.

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை cholesterol அகற்றலாம் என்பது அறிவியல் Science பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கேரட், ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன், விருத்தியும் அடையச் செய்கிறது. மேலும், குடல்புண்கள் Ulcer வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.

கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கேரட் சாறுடன் எலுமிச்சைச் சாறு  கலந்து சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ-யில் இருந்து பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்துவிடும்.

மஞ்சள்காமாலை குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது.
பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் உதிரப்போக்கை கேரட் கட்டுப்படுத்துகிறது.

உருளைக்கிழங்கை விட கேரட்டில் ஆறு மடங்கு சக்தி அதிகம் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது.

சருமத்துக்குப் பொலிவைத் தந்து, தோலில் ஏற்படும் சுருக்கத்தை கேரட் நீக்குகிறது.

பாதி வேகவைத்த முட்டையுடன் Egg, கேரட் மற்றும் தேன் Honey கலந்து சாப்பிட்டுவந்தால் ஆண்மைச் சக்தி அதிகரிக்கும்.

DO You Need Web Site?