-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

உயரமான கட்டிடங்கள் சீட்டுக்கட்டாய் சரிந்து விழுவது ஏன்? - செல்வம்

  சென்னை போன்ற கடற்கரையோர நகரங்களில் திடீரென காற்று மேலெளுவதும், திடீர் மேகங்கள் உருவாவதும் சாதாரணமாக நடைபெற வாய்ப்புள்ள ஒன்றுதான். ஆனால் ஒரு சிறிய மழைக்கு ஒரு மிகப்பெரிய கட்டிடம் ஒரு நொடியில் சரிந்து விழுவது மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.


பெரிய நகரங்களில் உயரமான கட்டிடங்கள் கட்டும்போது அதன் அழகையும், அதன் தூண்களின் வலுவையும் மட்டுமே கணித்தால் போதுமென நினைக்கின்றனர். இது மிகவும் தவறு.


அசாதரணமாக நிகழும் புயல், சூறாவளி, திடீர் காற்று, திடீர் மழை, திடீர் மேகம், அவற்றின் நகர்வு, திசை, அவற்றின் வேகம் ஆகியவற்றை கணிப்பிடத் தவறுகின்றனர். இவ்வாறு எழும் திடீர் காற்று, மேகம் கரைக்கு வரும்போது உயரம் மிகக் குறைவாக இருப்பதுடன் வேகம் மிக அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.




தங்கு தடையின்றி அதிவேகத்தில் வரும் இவற்றின் வேகத்தின் முன்பு தடையாக இருக்கும் உயரமான கட்டிடங்கள் மீது மோதும். மிகச் சரியான வடிவமைப்பே இவற்றை எதிர்த்து நிற்க இயலும். ஆகவே உயரமான கட்டிடங்கள் வடிவமைக்கும்போது ஏரோடைனமிக்ஸ் முறையில் வடிவமைத்தால் எவ்வளவு உயரமான கட்டிடங்களும் சரிந்து விழும் வாய்ப்புகள் குறைவே. மேலும் அடிப்பரப்புகள் அதிக அளவிலும் உயரம் செல்லச் செல்ல பரப்பளவுகளை குறைப்பதும், காற்றின் போக்கிலேயே கட்டிடங்களை அமைத்தாலும் இவ்வாறு ஒரு நொடியில் கட்டிடங்கள் சரிந்து விழுவதை தவிர்க்கலாம். மேலும் பூமிக்கு ஏற்றவாறும், நிலஅதிர்வுகளையும், அசைவுகளையும் கணிப்பதும் மிகச் சிறந்த அஸ்திவாரங்களை அமைப்பதும் சாலச் சிறந்தது.
இனி வரும் காலங்களில் கட்டிட நிபுணர்கள் பணத்தை மட்டுமே அளவுகோலாக கொள்ளாமல் மேற்படி விசயங்களையும் ஆராய்ந்து அறிந்து கட்டினால் இது போன்ற உயிர் இழப்புக்களை தவிர்க்கலாம். அடுக்கு மாடி குடியிருப்புக்கள் வாங்குவோரும் வீடு வாங்கினால் போதும் என்றில்லாமல் இது போன்ற விசயங்களையும் கவனித்தால் அன்பான உங்கள் குடும்பத்திற்கு அறிய பாதுகாப்பையும் வழங்க முடியும்.

அன்புடன் ஆசிரியர் - செல்வம் (07373630788)
தமிழ் உலகம் / சென்னை (29-06-2014 / 5.53pm)

DO You Need Web Site?