
உலகம் முழுவது உள்ள தமிழர்கள் தாயகமாக நினைப்பது மற்றும் வரலாற்று ரீதியாகவும் தமிழ்நாடுதான். உலகில் எங்கு தமிழனுக்கு பிரட்சனை என்றாலும் அவர்கள் வர நினைப்பது தமிழ்நாட்டுக்குத்தான்....
அப்போ தமிழனுக்காக பேச நாதியில்லையா... கேவலம் ...அவமானம் ..
சகதமிழனுக்காக பேச வக்கற்று போனோமடா ...வாயடைத்து நிற்கிறோமடா...
ஜல்லிக்கட்டுக்கு போராடி சரித்திரம் படைத்த தமிழர்கள் சக உறவுகளின் உரிமைகள் மறுக்கப்படும்போது கைகட்டி, வாய்மூடி வேடிக்கை பார்ப்பதா?
கையறு நிலையில் தாய்வீட்டிலாவது சென்று வாழமுடியுமா ... என தமிழ்நாட்டுக்கு வரும் உறவுகளை, நம் சொந்தங்களை .. நாடிழந்தவர்களாக்கி , வீடிழந்தவர்களாக்கி, உரிமையிழந்தவர்களாக்கி என்றைக்கும் அவர்களை அகதிகளாக்கி... உட்க்கார வைப்பதற்கான சட்டத்தை இயற்றும் போது நாமனைவரும் வேடிக்கை பார்ப்பதா...வேதனையில் விக்கித்து நிற்பவர்களே என்ன செய்யப்போகிறீர்கள் ?
மனதில் தீப்பந்தங்களாய் எறியும் கேள்விகளுக்கு விடைதான் என்ன?
மானத்தை உயிரெனக் கருதும் தமிழ் சமூகத்திலிருந்து ... மனம் நொந்து பிழைப்புத் தேடி வரும் அவர்களை அரவணைத்து .. ஆதரவு தருவதுதானே நம் தமிழர் மரபு ...
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்தானே நம் தமிழ்நாடு !!!
இன்றைக்கு பேசவில்லை என்றால் தமிழகம் என்றைக்கும் பேசமுடியாது ..
அரசியல்வாதிகளே! சமூக செயல்பாட்டாளர்களே! குடியிருப்போர் சங்கங்களே! ஆன்றோர்களே! சான்றோர்களே! இளைஞர்களே! மாணவ மணிகளே! அன்பு தமிழக மக்களே! நம் சக தமிழனுக்காய் ஒன்றுபட்டு நில்லுங்கள் ... ஒவ்வொரு தமிழர்களும் புலம்பெயர்ந்து வரும் ஈழத்து தமிழர்களின் குடிஉரிமைக்காய் குரல் கொடுங்கள்!
-- ஜெயசெல்வன்
+91 - 7373630788