ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்குவது சரியா?


தமிழக மக்களே! பெற்றோர்களே! மாணவ மணிகளே! வணக்கம். அரசு பள்ளிகளில் இந்த வருடத்தில் ஐந்தாம் வகுப்பு , எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்று ஜனவரி மாதம் வரை தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை திடீரென பொதுத் தேர்வு என அறிவித்திருப்பதால் பல மாணவர்கள் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக பல பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் வருந்தும் சூழல் உள்ளது. மேலும் பருவ முறை தேர்வு Term Exam  என கூறி இரண்டு பருவதேர்வுகள் முடித்துவிட்ட நிலையில் மூன்று பருவ புத்தகங்களிலும் கேள்வி கேட்கப்படும் என அறிவித்திருப்பது மாணவர்களுக்கு மேலும் சிரமத்தைக் கொடுக்கும்.


நமது மாணவர்கள் எப்படிப்பட்ட புத்தகத்தினையும் படிக்கும் திறமையுள்ளவர்கள். ஆனால் எப்படிப்பட்ட திறமையானவர்களுக்கும் அதற்கான கால அவகாசத்தினை அளிக்க வேண்டுமல்லவா?

இப்படிப்பட்ட முடிவினை எடுக்கும் அரசாங்கம் அதனை வருட ஆரம்பத்திலல்லவா அறிவித்திருக்க வேண்டும். வருடக் கடைசியில், தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் நடந்து அதன் மூலம் பல பாடங்கள் நடத்தப்படாமல் மாணவர்களும் ஆசிரியர்களும் திணறிக் கொண்டிருக்கும் சூழலில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது தலையில் கல்லைத் தூக்கிப் போடுவதுபோல இப்படி ஒரு அறிவிப்பை   தமிழக அரசு வெளியிட்டு மாணவர்களை வதைக்கலாமா?  யோசியுங்கள் மக்களே! மாணவர்களின் வாழ்க்கையில் அரசாங்கம் இப்படி விளையாடலாமா? யோசியுங்கள் மக்களே!


இதனால் தாழ்த்தப் பட்ட, பழங்குடியின மற்றும் அனைத்து ஏழை மாணவர்களின் கல்வியினை இந்த திடீர் முடிவு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். பல மாணவர்கள் அடுத்த ஆண்டு கல்வியினை தொடர முடியாத சூழலை ஏற்படுத்தும். அனைவருக்கும் கல்வி என்ற கல்வி உரிமை சட்டத்தினை குப்பையில் போட்டு குழி தோண்டி புதைக்கும் இந்த அறிவிப்பை மாணவர்களும் பெற்றோர்களும் தங்களின் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்வதின் மூலம் மாணவர்களின் எதிர்கால நலனை பாதுகாக்க அனைத்து பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், சமூக நலவாதிகளும், அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும்.

ஒரு சிறிய தீக்குச்சி பெரிய நெருப்பினை உண்டாக்குவது போல உங்கள் ஒவ்வொருவரின் சிறிய அசைவும், கண்டனமும், எதிர்ப்பும், பதிவுகளும் பல்லாயிரம் மாணவர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும். ஒன்றிணையுங்கள்  மக்களே! நமது தமிழக மாணவர்களின் நலனுக்காக நாமெல்லாம் ஒன்றிணைவது அவசியம்தானே! யோசியுங்கள் மக்களே! முடிந்தவரை இதைப் பகிருங்கள்!!!

ஜெயசெல்வன்
7373630788

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search