அதை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே பெற்றோரின் கடமையும் கூட...
நீங்கள் உங்கள் குழந்தைகளை கராத்தே, மற்றும் யோகாசனப் பயிற்சிக்கு அனுப்ப நினைப்பதில் யோசிக்கவேண்டியது இல்லை.
சிறுவர்களுக்கு உரிய யோகாசனப் பயிற்ச்சியும் பெரியவர்களுக்குரிய யோகாசனப் பயிற்ச்சியும் அதிக அளவில் வேற்றுமை இருக்கும்.
பொதுவாக சிறுவர்களுக்கு உடல் இலகுவாக வளைந்து கொடுக்கக் கூடியதாக இருப்பதால், அவர்களால் இலகுவாக யோகாசனப் பயிற்ச்சியை பயின்று விடுவார்கள்.
இங்கு ஒரு சில சிறுவர்கள் பாடசாலைகளில் ஒவ்வொரு நாளும் பாடங்கள் ஆரம்பிப்பதற்கு குறைந்த்தது முன்பு முதல் மூன்று நிமிடங்களுக்கு ஆசிரியர்கள் சிறுவர்களுக்கு உடல் உளத்தளர்வு பயிற்சி (Relaxation ) மேலோட்டமாக கற்றுக் கொடுக்கிறார்கள். காரணம், சிறுவர்களுக்கு அவதானிக்கும் திறன், செவிமடுக்கும் திறன், கற்பனைத் திறன், தன்னடக்கம், நிதானம் இவற்றை ஊக்குவிப்பதற்காக. பெரும் பாலான (தம்மைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர சிரமப் படும் சிறுவர்களுக்கும் பயன் படுகிறது). சிறுமிகள் யோகசப் பயிற்ச்சியை கற்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
எதையும் நடைமுறையில் பார்த்தால் தான் அறிந்து கொள்ள முடியும். யோகாசனப் பயிற்சிக்கு அனுப்புவது என்று முடிவு எடுத்தால் ஆரம்பத்திலையே அதிக நாட்களுக்கு அனுப்பாது இந்த கோடை விடுமுறைக்கு மட்டும் அனுப்பிப் பாருங்கள். உங்கள் மகனின் நடவடிக்கைகளை தினமும் அவதானித்து அதில் நல்ல முனேற்றம் இருப்பின் தொடர்ந்து அனுப்புங்கள்.