வணக்கம்.
உங்களைப்போல் நானும் ஓர் இந்திய
தேசத்தின் தமிழ் பிரஜை. தொன்றுதொட்டு வாழும் தமிழகத்தின் மக்களில் ஒருவனாய் பிறந்த, சமூகத்தின்பால் அக்கறையும்
வேதனையும் கொண்டு மக்களின் பிரச்சனைகளை
மாற்ற விளையும்
ஜெயசெல்வன்
ஜெயசெல்வன்
நீங்கள்
என்னைப்போன்றே சமூகத்தின்மேல் அக்கறை கொண்டவரா?
மக்களுக்காக
தொண்டு செய்யவேண்டும்
என்று விழைபவரா?
இந்தியாவை
ஊழலின் பிடியிலிருந்து மீட்டெடுக்க நினைப்பவரா?
ஊழலின்
ஆணிவேரையும் அசைத்து அறுத்தெறிய நினைப்பவரா?
அரசியல்…..
சாக்கடையில் கிடந்தாலும் எங்களால் அதனை தூர்வாரி சந்தனமாக்க
முடியும் என்ற நம்பிக்கை கொண்டவரா?
இந்திய
தேசத்தை பொருளாதார வல்லரசாக்க முடியும் என்பவரா?
மக்களுக்கு
உண்மையான ஜனநாயகத்தை காட்டவும், மக்களுக்கான அரசை உருவாக்க நினைப்பவரா?
விவசாயிகளின்
பிரட்சனைகளுக்கு, தொழிலாளர்களுக்கு,
மக்களின் வாழ்வாதாரங்களுக்கு போராட
நினைப்பவரா?
ஏழைகள்
இல்லாத இந்தியா, பசி கொண்ட வயிறுகள்
இல்லாத இந்தியா, அடிமைகள் இல்லாத இந்தியா, ஏமாற்று
அரசியல்வாதிகள் இல்லாத இந்தியா, சொந்த
நாட்டு மக்களின், ஏழைகளின் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் இல்லாத
இந்தியா உருவாகவேண்டும் என்று நினைப்பவரா?
இந்தியா
முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி
கொண்ட இந்தியா, அனைவருக்கும் கல்வி, மருத்துவம் இலவசமாய்
அளிக்கும் இந்தியா வீடில்லாதவர்களே இல்லாத
இந்தியா, ஏழைகளே இல்லாத சாதாரண
ஜனங்களும் முதலாளிகளாக்கப்பட்ட இந்தியா உருவாகவேண்டும் என்று
நினைப்பவரா?
மேலே உள்ள கேள்விகளுக்கு உங்களின்
பதில் ஆம் என்றால் நாமெல்லாரும்
நண்பர்கள். இந்திய தேசத்தின் பிரஜையான
நீங்கள் யாராக வேண்டுனால் இருந்துவிட்டு
போங்கள்… உறுதியாய் நாமெல்லாரும் இந்திய தேசத்தின் மாற்றங்களை
உருவாக்கப் போகும் விழுதுகள்
பண நாயகத்தை மாற்றி ஜனநாயகத்தை
மீட்டெடுக்க
மக்களின்
பொருளாதார வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து அவர்களிடமே ஒப்படைக்க
சமூக ஒடுக்குதல்களிடமிருந்து சமநிலையடைந்த நவீன இந்தியாவை உருவாக்க
நாளை வாழும் நமது தலைமுறைகள்
சந்தோசமாய் வாழ
வாருங்கள்
போராடுவோம்… ஒருங்கிணைந்து நின்று
விவேகானந்தர்
சொன்னார் நூறு இளைஞ்சர்களைத் தாருங்கள்
இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று...
நூறு பேர் நன்றாக வாழ
நூற்றி ஐம்பது கோடிப்பேர் உழைக்கும்
இந்த புண்ணிய பூமியில் இந்திய
மண்ணில் ஜனநாயகத்தின் பலனை நாட்டுமக்கள் அனைவருக்கும்
கிடைக்க வேண்டுமென்றால் அதற்க்காக நாம் அனைவரும் ஒன்றிணைய
வேண்டும். நான் மக்களுக்காக போராட
உழைக்க தயாராக உள்ளேன். என்னோடு
இணைந்து போராட, நாட்டுக்காக உழைக்க யார்
வருகிறீர்கள்?
எழுபது
ஆண்டுகளாய் மாறி மாறி ஆண்ட
அரசுகள் என்ன செய்திருக்கின்றன மக்களுக்கு?
இனியும்
இவர்களால் என்ன மக்களுக்கு கிடைக்கப்
போகிறது?
தேர்தல்
வந்தால் உறுதி கொடுப்பதும் ஜெயித்து
ஆட்ச்சியில் அமர்ந்தால் மக்களின் வாழ்க்கையை வாழ்வாதாரத்தைக் கெடுப்பதும் இவர்களுக்கு வாடிக்கைதானே....
இனியும்
இவர்களால் என்ன மக்களுக்கு கிடைக்கப்
போகிறது...
இனியும்
இந்தக் கொள்ளைக் கூட்டங்களை ஏமாற்றுப் பேர்வழிகளை எத்தனைக்காலம் ஆட்ச்சியில் அமர்த்தி அழகு பார்க்கப் போகிறீர்கள்
சிந்தியுங்கள்
மக்களே! கட்சியோ ... இயக்கமோ... எது மக்களுக்கு தேவையோ
அதை நாமே கட்டியமைப்போம் வாருங்கள்
நண்பர்களே!
நான் மக்களுக்காக போராட உழைக்க தயாராக
உள்ளேன். என்னோடு இணைந்து போராட,
நாட்டுக்காக உழைக்க யார் வருகிறீர்கள்?
வாருங்கள்
நண்பர்களே!
ஜெயசெல்வன் - Cell: 7373630788
இயக்கத்தில் இணைய
விரும்புபவர்கள் Facebook / Twitter மூலம் இணைந்துவிட்டு ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்
India Public Party,
E Mail:
demomoveindia@gmail.com
Twitter Page Link: https://twitter.com/jayaselvancool