
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு தீவுகளில் ஒன்றான பாரோ தீவிலுள்ள கசடலூர் எனும் கிராமத்தில், ஒன்பது பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள் என்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், மொத்தம் 18 தீவுகள் உள்ளன.
இவை சுரங்கப்பாதைகள், பாலங்கள் Bridge, படகுப் போக்குவரத்து Boat Transport ஆகியவற்றின் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த 18 தீவுகளும் Islands எரிமலைத் தீவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீவுகளில் பனி மூடிய மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள குட்டி கிராமமான, கசடலூர் கிராமத்தில் தான் வெறும் 9 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள்.
இங்கு வசிக்கும் மிகக்குறைந்த அளவு மக்களின் வீடுகளும் தனித்தனியே தான் காணப்படுகின்றன.
சில வீடுகளில் இருக்கும் சிறுவர்கள் விளையாடுகிறார்கள். பெரியவர்கள் தனிமையை விரும்புகிறார்கள். புத்தகங்கள் படிக்கிறார்கள்.
இந்த கிராமம் மட்டுமல்ல. இதற்கு அருகிலுள்ள மைக்கினஸ் என்னும் கிராமத்தில் 10 பேர் மட்டும் வாழ்கிறார்கள்.
இவற்றைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் 22 பேர் வசித்து வருகின்றனர். இதுதான் இங்குள்ள அதிகபட்ச மக்கள் வாழும் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?