
விமானிகளுக்கு Pilot சவால் ஓடுபாதையின் நீளம், நில அமைப்பு ஆகியவற்றால் விமானங்களை மேலே ஏற்றுவதிலும், இறக்குவதிலும் விமானிகள் பல சவால்களை சந்திக்கின்றனர். அதுபோன்று, விமானிகளுக்கு சவால் நிறைந்த அபாயகரமான ஓடுபாதைகளை Runway தொடர்ந்து காணலாம்.
![]() |
Para |
பாரா, ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரை Western Coast பகுதியில் அமைந்திருக்கும், பாரா விமான நிலையத்தின் ஓடுபாதையும் மிக அபாயகரமான பட்டியலில் List இடம்பெற்றிருக்கிறது. உலகிலேயே World கடற்கரையை ஓடுபாதையாக பயன்படுத்தி விமான சேவை Airline நடத்தப்படும் விமான நிலையமும் இதுதான். பகலில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சுபு சென்டர்ஏர், ஜப்பான்
ஜப்பானின் டோகோநேம் நகரின் அருகில் கடற்பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவில் அமைக்கப்பட்ட விமான நிலையம் இது. ஜப்பானின் Japan மிக பரபரப்பான 8வது விமான நிலையமாகவும் கூறப்படுகிறது. டொயோட்டா உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு அதிக பயன்தரும் விமான நிலையமாகவும் இருந்து வருகிறது. நான்கு புறமும் கடல்நீர் சூழ்ந்த இந்த விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானங்களை இறக்கி, ஏற்றுவதும் மிக சவால் நிறைந்ததாக குறிப்பிடுகின்றனர்.
சாவ் பாவ்லோ, பிரேசில்
பிரேசில் நாட்டு விமான நிலையங்களில் அதிக பயணிகள் பயன்படுத்தும் 3வது நிலையமாக விளங்குகிறது. பாரம்பரியம் மிக்க இந்த விமான நிலையத்தில் ஏர்பஸ் ஏ320, போயிங் 737 உள்ளிட்ட விமானங்கள் இறங்கும் வசதி கொண்டது. இது சாஃப்ட் ரன்வே என்று கூறப்படும் திடமில்லாத தரையில் அமைக்கப்பட்ட ஓடுதபாதையாகும். இந்த ஓடுபாதையில் ஏறி, இறங்கும்போது ஏராளமான விமானங்கள் விபத்தில் Accident சிக்கி இருக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு இந்த விமான நிலையம் சர்வதேச International அந்தஸ்தை இழந்தது.
கோபலிஸ், வாஷிங்டன்
அமெரிக்காவின் வாஷிங்டன் அருகிலுள்ள கிரேஸ் ஹார்பர் கன்ட்ரி பகுதியில் அமைந்திருக்கும் கோபாலிஸ் விமான நிலையமும் கடற்கரையிலேயே அமைந்த ஓடுதளத்தை கொண்டது. கோபாலிஸ் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்த இந்த ஓடுதளத்தில் விமானங்களை சட்டரீதியாக Legally இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட Permission பகுதியாகும். அலைகள் குறைவாக இருக்கும்போது மட்டும் விமான சேவை நடக்கிறது. மாதத்திற்கு சராசரியாக 16 விமான சேவைகள் நடத்தப்படுகின்றன.
கூர்ச்வெல், பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சிகரத்தின் மீது அமைந்த விமான நிலையம் இது. இது வெறும் 525 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதையை மட்டுமே கொண்டது. ஓடு பாதையின் முடிவில் சரிவான பகுதியை கொண்டது. இதில், விமானங்களை ஏற்றி, இறக்குவது மிகவும் சவால்நிறைந்தது.
கிப்ரால்டர்
கிப்ரால்டர் நாட்டிலுள்ள விமான நிலையம் 1800 மீட்டர் நீளம் கொண்ட Short distance குறைந்த தூர ரக ஓடுபாதையை கொண்டது. இந்த ஓடுபாதையின் குறுக்கே முக்கிய சாலை ஒன்று குறுக்கிடுகிறது. விமானம் ஏறி, இறங்கும் வேளைகளில் இந்த சாலை ரயில்வே கேட் Railway போன்று மூடப்படுகிறது. இதுவும் அபாயகரமான பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
குஸ்தாஃப் 3, கரீபியன் தீவு
கரீபியன் தீவில் அமைந்திருக்கும் குஸ்தாஃப் 3 விமான நிலையம் உலகின் 3வது மிக அபாயகரமான விமான நிலையமாக குறிப்பிடப்படுகிறது. சரிவுடன் ஓடுபாதை கடற்கரையில் முடிவடைகிறது. இதுவும் விமானிகளுக்கு சவால் நிறைந்தது.
கெய் கெய், ஹாங்காங்
1925 முதல் 1998ம் ஆண்டு வரை ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையமாக செயல்பட்டு வந்த கய் கய் விமான நிலையமும் அபாயகரமான பட்டியலில் இடம்பிடித்துள்ளது. உலகின் அபாயகரமான விமான நிலையங்களில் 6வது இடத்தில் உள்ளது. விண்ணை முட்டு கட்டிடங்கள் Buidings, மலைகள் ஒருபுறம், மறுபுறம் துறைமுகத்தில் முடியும் ஓடுபாதை என விமானிகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் Techanically பல சவால்களை தரும் விமான நிலையமாக இருந்துள்ளது.
கன்சய், ஜப்பான்
ஜப்பானின், ஒசாகா வளைகுடாவில் Bay அமைக்கப்பட்ட செயற்கை தீவில் Island அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம். 1994ம் ஆண்டு முதல் இந்த விமாந நிலையம் செயல்பட்டு வருகிறது. மூன்று மலைகளை உடைத்து வந்து கடலில் கொட்டி இந்த செயற்கை விமான நிலையத்திற்கான தீவை உருவாக்கியுள்ளனர். பஸ் Bus, ரயில் Train, படகு Boat போக்குவரத்து மூலம் அருகிலுள்ள ஒசாகா நகருடன் இணைப்பு பெற்றுள்ளது. நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் கடும் பாதிப்புகளை சந்திக்கும் விமான நிலையம் இது.
மடெய்ரா, போர்ச்சுகல்
ஒருபுறம் மலைகளையும், மறுபுறம் அட்லாண்டிக் கடலையும் எல்லைகளாக கொண்ட இந்த விமான நிலையமும் உலகின் அபாயகரமான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அனுபவம் Experience வாய்ந்த விமானிகள் கூட இந்த விமான நிலையத்தின் ஓடுபாதையில் இறக்கும்போதும், ஏற்றும்போதும் பிரச்னைகளை சந்திப்பது வாடிக்கை. கொஞ்சம் பிசகினாலும் ஒன்று கடல் Sea, இல்லை மலை என்ற நிலையில்தான் இறக்க, ஏற்ற முடியும்.
மேட்கேன் ஓடுதளம், ஆப்ரிக்கா
ஆப்ரிக்காவின் லெசதோ பகுதியில் அமைந்திருக்கும் 400 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஓடுபாதையின் ஒரு முடிவு மரண பள்ளத்தை கொண்டுள்ளது. வெளி தொடர்பு இல்லாத கிராமங்களுக்கு Village செல்லும் டாக்டர்கள் Doctors மற்றும் தொண்டு அமைப்பினர் இந்த ஓடுபாதையை பயன்படுத்தி செல்கின்றனர். இதுவும் மிக அபாயகரமானதாகவே இருக்கிறது.
நர்சர்சுயக், கிரீன்லாந்து
தெற்கு கிரீன்லாந்து நாட்டின் சர்வதேச விமான நிலையமாக நர்சர்சுகயக் விமான நிலையம் அமைந்துள்ளது. இது இரண்டாம் உலகப்போரின்போது Military ராணுவ விமான தளமாக உருவாக்கப்பட்டது. சூறாவளிகளால் அதிக பாதிப்பு உள்ள விமான நிலையம். பகலில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுகிறது.
பாரோ, பூடான்
உலகின் மிக அபாயகரமான விமான நிலைய ஓடுபாதையாக பூடானின் பாரா குறிப்பிடப்படுகிறது. இமயமலையில், பாரோ பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையத்தின் ஓடுபாதையில் இரவிலும், பனிபடர்ந்த சமயங்களிலும் விமானங்களை இறக்கி, ஏற்றுவது மிகவும் சவாலாக குறிப்பிடப்படுகிறது. சுற்றிலும் 18,000 அடி உயரத்திலான மலைகள் சூழ்ந்திருக்கும் இந்த விமான நிலையத்தில் விமானங்களை இயக்கிச் செல்வதற்கு 8 விமானிகளுக்கு மட்டுமே சான்றிதழ் ficateCerti வழங்கப்பட்டுள்ளது.
பெகசஸ் ஃபீல்டு, அண்டார்டிகா
அண்டார்டிகாவின் பனிப்படர்ந்த பகுதியில் உள்ள ஓடுதளம் இது. ஆண்டுமுழுவதும் சக்கரங்களை கொண்ட விமானங்களை இதில் ஏற்றி, இறக்க முடியும். அண்டார்டிகாவில் மீதமுள்ள இரண்டு ஓடுபாதைகள் பனிக்கட்டிகள் அதிகம் கொண்டவை என்பதால், அதற்கான பிரத்யேக வசதி கொண்ட விமானங்களை மட்டுமே இயக்க முடியும்.
பிரின்சஸ் ஜூலியான, செயிண்ட் மார்ட்டின்
செயிண்ட் மார்ட்டின் தீவில் உள்ள பிரின்சஸ் ஜூலியானா விமான நிலையத்தின் ஓடுபாதை 2,300 மீட்டர் நீளம் கொண்டது. எனவே, கடற்கரையில் மிக தாழ்வாக பறந்து வந்து ஓடுபாதையில் இறக்க வேண்டும். இதுவும் விமானிகளுக்கு சவால் விடும் ஓடுபாதையாக குறிப்பிடப்படுகிறது.
குயிட்டோ, ஈகுவடார்
தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடார் நாட்டின் குயிட்டோ நகரிலுள்ள விமான நிலையமும் அபாயம் நிறைந்ததாக கூறப்படுகிறது. இந்த விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் விபத்துக்குள்ளாகியிருக்கின்றன.
ஸ்வால்பர்டு, நார்வே
உலகின் வடகோடி பகுதியில் அமைந்திருக்கும் விமான ஓடுதளம் இது. 2,483 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஓடுபாதையிலும் விமானங்களை ஏற்றி இறக்குவது கடினமானதாக குறிப்பிடப்படுகிறது.
டென்ஸிங், நேபாளம்
நேபாள நாட்டில் உள்ள டென்ஸிங் ஹில்லாரி விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 2,860 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சில நூறு மீட்டர்கள் ஓடுபாதை கொண்ட இந்த விமான நிலையமும் அபாயத்தின் உச்சமாக குறுப்பிடப்படுகிறது.
டன்கன்டின், ஹண்டூராஸ்
ஹண்டூராஸிலுள்ள டன்கன்டின் விமான நிலையமும் அபாயகரமானதாக குறிப்பிடப்படுகிறு. பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் இந்த ஓடுபாதையில் சரியாக கணித்து தரையிறக்குவது மிக கடினமானதாக கூறுகின்றனர்.
ஓன்டாரியோ, கனடா
டோரன்டோ தீவுகள் விமான நிலையமும், மிக குறைவானதாகவும், அதேநேரத்தில் மிக சாதுர்யமாக தரையிறக்க வேண்டிய விமான நிலையமாக இருக்கிறது.
ஜூவான்கோ, சாபா
சாபாவில் உள்ள ஜூவான்கோ விமான நிலையமும் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த பகுதியில் அமைந்த ஓடுபாதையை கொண்டுள்ளது. இதன் ஒருபகுதிய கடலில் முடிவடைகிறது.
வெலிங்டன், நியூசிலாந்து
சூறாவளி தாக்கம் அதிகம் இருக்கும் இந்த விமான நிலையமும் உலகின் அபாயகரமானதாக குறிப்பிடப்படுகிறது. இதுவும் குறைந்த தூர ஓடுபாதையை கொண்டது.
வில்லியம் ஃபீல்டு, அண்டார்டிகா
அண்டார்டிகாவில் உள்ள வில்லியம்ஸ் ஃபீல்டு ஓடுபாதையில் பனித்தரையில் இயக்குவதற்கான விசேஷ கருவிகள் கொண்ட விமானங்களை மட்டுமே தரையிறக்க முடியும்.
மங்களூர் விமான நிலையம்
மங்களூர் விமான நிலையத்தின் ஓடுபாதை அமைப்பும் இந்திய அளவில் அபாயகரமானதாக குறிப்பிடப்படுகிறது. மலைமுகட்டில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த கோர விபத்தும் ஒரு சான்றாக இருக்கிறது.