
கூகுள் நிறுவனம் Google தனது தேடல் Search Engine சேவையில் புதிதாக வேலை வாய்ப்பினை தேடுவதற்கான பிரத்தியேக சேவையை அறிமுகச் செய்துள்ளது. வேலை Job தேடுவதற்கான இந்தச் சேவையினைச் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துள்ள கூகுள் இணையதளம் மூலமாகப் பிற நிறுவனங்களின் வலைத்தளங்களில் Blogs இருந்த தகவல்களை Information அளிக்கக் கூகுள் முடிவு செய்துள்ளது.
டூப்லிகேட் இருக்காது No Duplicate
அதுமட்டும் இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் இருந்து வேலைவாய்ப்பு செய்திகளைப் பெறும் போது டூப்லிகேட் இல்லாமல் பெறுவதற்கான தளமாகவும் இது இருக்கும்.
ரேட்டிங் சேவை Rating Service
கூகுள் நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பு தேடல் சேவையில் நடப்பு மற்றும் முன்னால் ஊழியர்கள் தாங்கள் வேலை செய்யும் போது நிறுவனத்தைப் பற்றி அளித்த ரேட்டிங் போன்றவற்றையும் காணலாம்.
தேடல் போன்ற வேலைவாய்ப்பு இஞ்சின்
கூகுள் நிறுவனத்தின் தேடல் தளம் நமக்குத் தேவையான தரவைத் தேடும் போது எப்படிப் பிற இணையதளங்களுக்கு இணைப்பை அளிக்கின்றதோ அதை விட இது சற்று மாறுபட்டதாக இருக்கும்.
முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்
கூகுள் நிறுவனம் இதற்காக லின்க்டுஇன் LinkedIn, மான்ஸ்டர் Monster, வேஅப், டைரெக்ட் எம்ப்லாயர்ஸ் Direct Employers, கேரியர் பில்டர் Career Builder, கிளாச்டோர் Glass door மற்றும் பேஸ்புக் Facebook நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட இருக்கிறது.